கெருடாவில் மாயவர் கோயில் தீர்த்தோற்சவம் இன்று இடம்பெற்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 15/10/2016 (சனிக்கிழமை)
தொண்டைமனாறு கெருடாவில் தெற்கில் அமைந்துள்ள ஸ்ரீ கெருடயம்பதி மாயவர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் இறுதி உற்சவமான சமுத்திரத் தீர்த்தம் இன்று 15.10.2016 வல்வெட்டித்துறை ஊறணி தீர்த்தக் கடற்கரையில் இடம்பெற்றது.
கடந்த 30.09.2016 அன்று ஆரம்பமாகி 17 தினங்களாக நடைபெறும் மகோற்சவத்தின் நன்னீர் தீர்த்தம் நாளை 16.10.2016 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் இடம்பெறவுள்ளது.
ஸ்ரீ கெருடயம்பதி மாயவர் புதிதாகச் செய்யப்பட்ட சகடையில் செல்ல அவருக்கு முன்னால் ஆஞ்சநேய சுவாமி சென்று ஊறணி தீர்த்தக் கடற்கரை தீர்த்தமாடினர்கள்.
கீழே படங்களில் தீர்த்த உற்சவத்திற்காக சுவாமி ஊறணி தீர்த்தக் கடற்கரை நோக்கி வருவதனைக் காணலாம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.