கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா இன்றும் நாளையும் இடம்பெறுகின்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 28/02/2015 (சனிக்கிழமை)
கச்சதீவு புனித அந்தோனியார் (Kachchatheevu St. Antony's Catholic Shrine) திருவிழா இன்று 28 ஆம் திகதி ஆரம்பமாகிறது. இன்று 28ஆம் திகதி ஆரம்பமாகும் கச்சத்தீவு புனித அந்தோனியார் உற்சவம் நாளை 1 ஆம் திகதிவரை நடைபெறுகிறது.
இன்று இரவு சிறப்பு திருப்பலி, சிலுவை பாதை பூஜை நடக்கிறது. 1 ஆம் திகதி காலை திருப்பலி பூஜை முடிந்ததும், கொடி இறக்கப்படும். விழாவில், இலங்கை யாழ்ப்பாணம் மறை மாவட்ட பிஷப், தமிழக கத்தோலிக்க பாதிரியார்கள் கலந்து கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை - இந்திய கிறிஸ்தவ மக்களின் புனித தலமாக கருதப்படுகின்ற கச்சதீவு அந்தோனியார் ஆலய உற்சவத்திற்கென தமிழகத்திலிருந்தும் இலங்கையிலிருந்தும் பலர் செல்லுவது வழமையாகும்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.