ஹாட்லி, சாவகச்சேரி இந்து மாணவர்கள் அகில இலங்கை ரீதியில் புதிய சாதனை
பிரசுரிக்கபட்ட திகதி: 31/10/2019 (வியாழக்கிழமை)
35 ஆவது .அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டியில் (35th All Island School games 2019 குண்டெறிதலில் (U -18) பிரிவில் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி மாணவன் S. மிதுன்ராஜ் முன்னைய சாதனையை முறியடித்து முதலிடம் பெற்றுள்ளார்.
குண்டெறிதலில் புதிய சாதனையாக 15.95M யை இவர் ஏற்படுத்தியுள்ளார்.
நேற்று கொழும்பு சுகதாச விளையாடடரங்கில் குறித்த போட்டிகள் ஆரம்பமாகின. நேற்றைய போட்டிகளில் நான்கு புதிய சாதனைகள் ஏற்படுத்தப்படடன
இவற்றில் நான்காவதாக சாவகச் சேரி இந்தக் கல்லூரி மாணவன் அனந்தராஜா புவிதரன் கோல் ஊன்றிப் பாய்தலில் (Pole Vault ) 20 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில், யாழ் அருணோதயா கல்லூரி மாணவன் N .ஜோய்சனின் முன்னைய சாதனையான 4.61 மீட்டர் முறியடித்து, 4.82 மீட்டர் உயரம் பாய்ந்து புதிய சாதனையை நிலை நாட்டியுள்ளார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.