கிழக்கு ஆசிய கடலில் ஏற்பட்ட மிகவும் மோசமான கப்பல் விபத்து
பிரசுரிக்கபட்ட திகதி: 12/01/2018 (வெள்ளிக்கிழமை)
ஈரான் நாட்டில் பதிவு செய்யப்பட்ட எண்ணை தாங்கிக் கப்பல் ஒன்றும், கொங் கோங்கில் பதிவு செய்யபட்ட சரக்குக் கப்பல் ஒன்றும் மோதிக் கொண்டதில் இரண்டு கப்பல்களும் மிகக் கடுமையாக சேதமடைந்துள்ளன.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து எண்ணை தாங்கிக் கப்பலில் பாரிய தீ ஏற்பட்டுள்ளதுடன் அக்கப்பலில் இருந்த 32 மாலுமிகளும் காணாமல் போயுள்ளனர்.
இந்தச் சம்பவம் கடந்த சனிக்கிழமை சீனாவின் பிரதான துறைமுகமான ஷாங்காய்ற்கு கிழக்காக சுமார் 150 கடல் மைல்கள் தொலைவில் தென் சீனக் கடலில் (East china sea) ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து இன்று 6 ஆவது நாளாக தீ தொடர்ந்து எரிவதாகவும், பாரிய வெடிப்பு நேற்று இடம்பெற்றதாகவும் இதனால் காணாமல் போயுள்ள மாலுமிகளை காப்பாற்றும் நடவடிக்கை தடைபட்டுள்ளதாயும் தெரிவிக்கப்படுகின்றது.
கப்பலின் இயந்திர அறையில் தீ பரவததால், கடல் மட்டத்திலிருந்து 16 மீட்டர் கீழேயுள்ள குறித்த இயந்திர அறையில் மாலுமிகள் தங்கியிருக்கலாம் என மீட்பு படையினர் நம்புகின்றனர்.
அண்மைக் காலங்களில் கிழக்கு ஆசிய கடலில் ஏற்பட்ட மிகவும் மோசமான சம்பவம் இது என கூறப்படுகின்றது.
எண்ணை தாங்கிக் கப்பல் தாளும் படச்சத்தில் சுமார் 136000 டொன் எண்ணை கடலில் கலக்கும் அபாயம் உள்ளது என இது மிகப்பெரிய சேதத்தை உண்டு பண்ணும் எனவும் Green peace அறிக்கை விட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.