சார்ஜாவில் வசிக்கும் இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட 14 வயது சிறுவன் ஒருவன், தனி ஒரு இயந்திரம் (single engine aircraft) உள்ள விமானம் ஒன்றில் வானில் பறந்து உலக இளம் விமானி என்ற பட்டத்தைப் பெறுகின்றான்.
சார்ஜாவில் (Sharjah) உள்ள டெல்லி தனியார் பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மன்சூர் அனிஸ் (Mansour Anis) என்னும் சிறுவனே வெறும் 25 மணி நேர பயிற்சியின் பின்னர் விமானத்தைப் பறப்பித்ததாக Gulf News செய்தி வெளியிட்டுள்ளது.
மன்சூர் அனிஸ் குறித்த விமானத்தை தனியாக இயக்குவதற்கான தகமைச் சான்றிதழை கனடாவில் உள்ள ஏவியேஷன் அக்கடமி ஒன்றில் பெற்றுள்ளார்.
தனியான பறப்பை Cessna 152 ரக விமானத்தில் சுமார் 10 நிமிடங்கள் சிறுவன் மன்சூர் அனிஸ் மேற்கொண்டுள்ளான் என செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.