19 வயதான இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த Kshitji Singh Bisht என்னும் இளைஞன், கப்பல் ஒன்றில் Cadet ஆக பணிபுரிய ஆரம்பித்து வெறும் 2 நாட்களில் உயிர் இழந்த சம்பவம் கடலியல் சமூகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 27 ஆம் திகதி லண்டனில் உள்ள துறைமுகம் ஒன்றில், இத்தாலியின் Mediterranean Shipping Company க்குச் சொந்தமான MSC Dalma என்னும் கப்பலில் குறித்த Cadet பணிபுரிய சேர்ந்துள்ளார்.
2 நாட்கள் பின்னர், பெல்யியத்தின் புருஸ்லஸ் என்னும் பகுதியில் கடந்த 29 ஆம் திகதி நள்ளிரவு, கப்பலின் உட்பகுதி ஒன்றிற்கு தனியாக அனுப்பப்பட்ட சமயம், ஏணி வழியாக இறங்கும் பொழுது தவறி விழுந்துள்ளார். இவர் திரும்பாததையடுத்து 0230 மணிக்கு சென்று பார்த்த பொழுது இவர் இறந்து கிடந்துள்ளமை தெரிய வந்துள்ளது.
புதிதாக சேர்ந்த ஒருவரை தனியாக அதுவும் நள்ளிரவு அனுப்பியமை பெரும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
இறந்த Cadet தேசிய ரீதியில் வெற்றி பெற்ற Table tennis வீரர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக Brussels போலீசார் மேலதிக விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
Kshitji Singh Bisht கடைசியாக Facebook இல் தரவேற்றியிருந்த படமும், செய்தியும் கீழே
“ Future Captain in MSC and love travelling and love playing table tennis”
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.