வல்வை இளங்கதிர் விளையாட்டுக் கழகம் வல்வை வி.கழகத்துக்குட்பட்ட கழகங்களுக்கிடையே இன்று ஒருநாள் உதைபந்தாட்ட தொடரை நடத்தியது. இத் தொடரானது வல்வெட்டித்துறை தீருவில் விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெற்றது.
இப் போட்டித்தொடரில் வல்வை வி.கழகத்துக்குட்பட்ட அனைத்துக் கழகங்களும் பங்குபற்றியிருந்ததுடன் போட்டிகள் யாவும் விலகல் முறையில் அமைந்திருந்திருந்தன.
இன்று காலை 9.00 மணியளவில் ஆரம்பமான போட்டியின் முதற் சுற்று போட்டிகளின் முடிவுகள் வருமாறு;
உதயசூரியன் கழகம் எதிர் இளங்கதிர் இ.வி.கழகம் - 2 : 2 சமநிலைதவிர்ப்பு உதையில் உதயசூரியன் கழகம் வெற்றி.
ஆட்டநாயகன் :- பா.வசந்த் ( உதயசூரியன் கழகம் )
தீருவில் இ.வி.கழகம் எதிர் ரெயின்போவி.கழகம் - 3 : 0 கணக்கில் தீருவில் இ.வி.கழகம் வெற்றி.
ஆட்டநாயகன் :- மதன் ( தீருவில் இ.வி.கழகம் )
முதல் அரையிறுதிப் போட்டியில் வல்வை உதயசூரியன் கழகத்தை எதிர்த்து வல்வை ரேவடி ஐக்கிய இளைஞர் விளையாட்டுக் கழகம் மோதியது. விறுவிறுப்பான ஆட்டநேர முடிவில் ரேவடி ஐ.இ.வி.கழகம் 2 : 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
ஆட்டநாயகன் :- நந்தகுமார் ( ரேவடி ஐ.இ.வி.கழகம் )
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வல்வை சைனிங்ஸ் விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து வல்வை தீருவில் இளைஞர் விளையாட்டுக் கழகம் மோதியது. ஆட்டநேர முடிவில் தீருவில் இ.வி.கழகம் 2 : 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
ஆட்டநாயகன் :- சண்முகதாஸ் ( தீருவில் இ.வி.கழகம் )
இவ் ஒருநாள் தொடரின் இறுதிப் போட்டியானது சிறிது நேர இடைவெளியின் பின் இன்று மாலை 4.30 மணியளவில்திருவில் வி.கழக மைதானத்தில் நடைபெற்றது.
இறுதிப்போட்டியில் வல்வை தீருவில் இளைஞர் விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து வல்வை ரேவடி ஐக்கிய இளைஞர் விளையாட்டுக் கழகம் மோதியது. போட்டியின் ஆரம்பம் முதல் விறுவிறுப்பாக நடந்து முடிந்த போட்டியின் முடிவில் ரேவடி ஐ.இ.வி.கழகம் 3 : 1 என்ற கோல் அடிப்படையில் தீருவில் இ.வி.கழகத்தை வெற்றிகொண்டது.
இளங்கதிர் இ.வி.கழக ஒரு நாள் தொடரின் இறுதிப் போட்டியின் வெற்றியீட்டிய ரேவதி அணிக்கு வெற்றிக்கிண்ணம் வழங்கிக் கெளரவிக்கப்பட்டது. இறுதிப் போட்டியின் ஆட்டநாயகனாக சீலன் ( ரேவடி ஐ.இ.வி.கழகம் ) அவர்களும் தொடர் ஆட்டநாயகனாக நந்தகுமார் ( ரேவடி ஐ.இ.வி.கழகம் ) அவர்களும் தெரிவாகினர்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.