இம்முறை ஜனாதிபதி தேர்தலில் கடந்த முறையினை போல் அல்லாது இரண்டாவது மற்றும் மூன்றாவது விருப்ப தெரிவினையும் நீங்கள் தெரிவு செய்யமுடியும் அதாவது நீங்கள் உங்களுக்கு விரும்பிய மூன்று பேருக்கு வாக்களிக்கலாம். ஆனால் அதை புள்ளடி மூலம் தெரிவு செய்ய முடியாது. புள்ளடி இடவென ஒதுக்கப்பட்ட இடத்தினுள் 1, 2, 3 என இலக்கங்கள் ஊடாகவே பதிவு செய்யவேண்டும்.
நீங்கள் பிரதானமாக யாருக்கு வாக்களிக்க விரும்புகின்றீர்களோ அவரின் பெயருக்கு நேரே புள்ளடி இடவென ஒதுக்கப்பட்ட இடத்தினுள் ( 1 ) என்ற இலக்கத்தை இடவேண்டும். அதற்கு மேலதிகமாக இன்னொருவருக்கு வாக்களிக்க அவரின் பெயருக்கு நேரே உள்ள பெட்டியினுள் ( 2 ) என்ற இலக்கத்தை எழுதவேண்டும் மேலும் ஒருவரை தெரிவு செய்ய விரும்பினால் அவரின் பெயருக்கு நேரே உள்ள பெட்டியினுள் ( 3 ) என்ற இலக்கத்தை எழுதவேண்டும். இவ்வாறு கட்டாயம் மூன்றுபேரை நீங்கள் தெரிவு செய்யவேண்டும் என்ற அவசியம் இல்லை இருவரை தெரிவு செய்யலாம் அவ்வாறு தெரிவு செய்வதாயின் பிரதான வேட்பாளரின் பெயரின் நேரே உள்ள பெட்டியில் ( 1 ) என்றும் அடுத்தொரு வேட்பாளரின் பெயரின் நேரே உள்ள பெட்டியில் ( 2 ) என்ற இலக்கத்தை இடுவதன் மூலம் உங்கள் வாக்கினை அளிக்கலாம்.
இவை எதுவும் இல்லாமல் ஒரே ஒருவருக்குத்தான் வாக்களிக்கப்போகின்றீர்கள் என்றால் எவ்வித குழப்பமும் இல்லாமல் யாருக்கு வாக்களிக்க போகின்றீர்களோ அவரின் பெயர் மற்றும் சின்னத்திற்கு நேரே உள்ள பெட்டியில் புள்ளடி ( X ) இடுவதன் மூலம் உங்கள் வாக்கை இலகுவாக செலுத்திவிட்டு வரலாம்.
ஒரே ஒருவருக்கு புள்ளடி மூலம் வாக்களித்தால் இன்னொரு நபருக்கு உங்களின் இரண்டாவது வாக்கை செலுத்த முடியாது. ஒன்றுக்கு மேற்பட்டவர்களுக்கு புள்ளடி இட்டால் உங்கள் வாக்கு பிரயோசனம் அற்ற நிராகரிக்கப்பட்ட வாக்காகப்போய்விடும்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.