கம்பர்மலை ஞானவைரவரில் சிறுவர்களுக்கான வினா விடை - ஒரு முன் மாதிரி
பிரசுரிக்கபட்ட திகதி: 18/06/2016 (சனிக்கிழமை)
கம்பர்மலை ஸ்ரீ ஞான வைரவர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவத்தை முன்னிட்டு சைவத்தையும் தமிழையும் பொது அறிவையும் வளர்க்கும் நோக்குடன் சிறுவர்களுக்கான வினா விடை போட்டி ஒன்று கடந்த 10 ஆம் திகதி முதல் நடாத்தப்பட்டுவருகின்றது.
சமூக ஆர்வலர் திரு.வேலுப்பிள்ளை பாஸ்கரன் என்பவரினால் நடாத்தப்பட்டுவரும் இந்த நிகழ்வில் பாலர் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரையான பல சிறார்கள் ஆர்வத்துடன் கலந்து வருகின்றனர். நிகழ்வில் வெற்றி பெறும் சிறார்களுக்கு சிறு பரிசல்கள் வழங்கப்படுவது சிறார்களை குறித்த நிகழ்வில் பங்கெடுக்க ஊக்கப்படுத்திவருகின்றது
நிகழ்வு தினந்தோறும் சரியாக மாலை 6:00 மணிக்கு ஆலய முன்றலில் இடம்பெற்றுவருகின்றது.
அதிக ஆடம்பரங்கள் இன்றி, பணத்தை வாரியிறைக்காமல் சைவத்தையும் தமிழையும் பொது அறிவையும் சிறார்களிடையே புகட்டும் இந்த முயற்சி பலரின் பாராட்டைப் பெற்றுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.