நாட்டில் மேக மூட்டம் மற்றும் தொடரக்கூடும் என்று இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் (Department of meteorology) தெரிவித்துள்ளது.
நாட்டில் கடல் பிரதேசங்களில் வலுவான காற்றை எதிர்பார்கலாம். மேற்கு, சப்ரகமுவ, வடமேல், வடக்கு, காலி, மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் 100 தொடக்கம் 150 மில்லி மீற்றர் மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை தமிழகத்தில் 3 நாட்கள் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு இயல்பைவிட 111 சதவீதம் அதிகம் பெய்யும் என்று வானிலை நிலையம் குறிப்பிட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழையும் இயல்பைவிட 29 சதவீதம் அதிகம் பெய்துள்ளது. அதேபோல், நாளை ஆந்திர கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் முன்னறிவிப்பு செய்துள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.