வடமாகாண பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்ற ஆண்களுக்கான எல்லே போட்டியில் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி அணி சம்பியன் கிண்ணத்தை தமதாக்கிக் கொண்டது. இதன் இறுதியாட்டம் நேற்று மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.
இறுதியாட்டத்தில் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி அணியை எதிர்த்து சாவகச்சேரி இந்துக் கல்லூரி அணி மோதியது. முதலில் துடுப்பெடித்து ஆடிய ஹாட்லிக் கல்லூரி அணி வழங்கப்பட்ட 50 பந்துகளில் 13 ஓட்டங்களைப் பெற்றது. இவ்வணி சார்பாக தினேஷ் 5, சிந்துராஜ் 2, சயிந்தன், டிலக்சன் , துஷ்யந்தன், கிரிதரன், சிந்துஜன், ஆனந்த் ஆகியோர் தலா ஒவ்வொரு ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.
பதிலுக்கு துடுப்பாடிய சாவகச்சேரி இந்துக் கல்லூரி அணி வழங்கப்பட்ட 50 பந்துகளில் 5 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 8 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. இதனால் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி அணி நடப்பாண்டு சம்பியன் கிண்ணத்தை தமதாக்கிக் கொண்டது.
சாவகச்சேரி இந்துக் கல்லூரி அணி சார்பில் கஜீபன் 2, நிதுசன் பவித்திரன் பிருந்தாபன் தலா ஒவ்வொரு ஓட்டங்களையும் பெற்றனர்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.