பருத்தித்துறை ஹாட்லி கல்லூரியைச் சேர்ந்த மாணவன் செல்வன் சிவதர்சன் அடுத்த மாதம் அமெரிக்காவில் இடம்பெறவுள்ள 65 ஆவது ISEF 2015 (Intel Science and Engineering Fair) ற்கு தெரிவுசெய்யபட்டுள்ளார். இலங்கையில் தெரிவாகியுள்ள 5 மாணவர்களில் சிவதர்சனும் ஒருவர் ஆவார்.
அண்மையில் இலங்கையில் நடைபெற்ற Sri Lanka Science and Engineering Fair (SLSEF) 2015 இல், செல்வன் சிவதர்சன் தனிப்பட்டோர் பிரிவில் சிறந்த போட்டியாளராக வெற்றி பெற்றிருந்தார்.
சிவதர்சனின் “கண் பாதுகாப்பு மற்றும் சக்தியை மிச்சப்படுத்தும் மின்குமிழ்” (Eye Protection and Energy Saving Lamp’ project) வடிவமே போட்டியில் கலந்துகொண்டிருந்த கல்விமான்களான நடுவர்களைக் கவர்ந்திருந்தது.
வடிகட்டிய தண்ணீர் நிரப்பப்பட கோளம் ஒன்றிற்குள் வைக்கப்பட்டிருந்த LED மின்குமிழே இவரது படைப்பாகும். இதில் LED மின்குமிழில் இருந்து வெளியாகும் ஒளிக்கற்றைகள் ஒரே மாதிரியாக வெளிப்படுவதுடன் அவற்றின் ஒருமுகப்படுத்தப்படும் தன்மையும் அதிகரிக்கப்படுவதாகச் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் Pennsylvania வில் நடைபெறவுள்ள Intel Science and Engineering Fair (ISEF) 2015 ஆனது பாடசாலை மாணவர்களுக்கான உலகில் நடைபெறும் ஆகப்பெரிய சர்வதேச விஞ்ஞான போட்டியாக கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
Thevarajah Sivakuru (Denmark)
Posted Date: April 08, 2015 at 21:07
எனது பெறாமகன் சிவதர்ஷன், அவர்களுக்கு எங்களது வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன்.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.