யாழ்.பல்கலைக் கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்தும் வட கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடரும் அரச பயங்கரவாதத்தை கண்டித்தும் வட மாகாணம் தழுவிய பூரண ஹர்த்தாலுக்கு தமிழ் அரசியல் கட்சிகள் கூட்டாக அழைப்பு விடுத்திருந்தன.
கடந்த 21ஆம் திகதி யாழ்.கொக்குவில் – குளப்பிட்டி பகுதியில் யாழ்.பல்லைக் கழக மாணவர்கள் இருவர் பொலிஸார் நடத்திய துப்பாக்கி சூட்டில் படுகொலை செய்யப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து இன்று வடக்கில் பூரண ஹர்த்தால் அனுச்டிக்கப்பட்டுவருகின்றது. பூரண ஹர்த்தால் காரணமாக வல்வையிலும் அலுவலகங்கள் மற்றும் கடைகள் மூடப்பட்டுள்ளன்ன.
கீழே படத்தில் ஹர்த்தால் காரணமாக வல்வை சந்திப்பகுதியில் கடைகள் மூடப்பட்டிருப்பதனைக் காணலாம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.