திரு.சூ.சே.குலநாயகம் அவர்கள் சிறு வயதிலிருந்து தமிழரசுக்கட்சித் தொண்டனாக இருந்து பின்பு தமிழரசுக்கட்சியின் யாழ்மாவட்ட உதவிச் செயலாளராகவும் உயர்ந்து 2011ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலிலும் போட்டியிட்டவர். வல்வை நெடியகாடு விளையாட்டுக் கழக்த்தின் தலைவராகப் பலபல வருடங்கள் கடமையாற்றி, இந்த வருடமும் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
குலநாயகம்
இவர் சிதம்பராக்கல்லூரி பழைய மாணவர் சங்க நிர்வாகத்திலும் ரோமன் கத்தோலிக்கப் பாடசாலை நிர்வாகத்திலும் இருப்பதோடு, கலைக்கப்பட்ட நகரசபை உறுப்பினராகவும் இருந்தார். 1959ம் ஆண்டு நான் பையனாக இருக்கும்போது சிதம்பரா மைதானத்தில் களியாட்ட விழா நடத்தப்பட்டு (நெடியகாடுகழகத்திற்க்கு), முதன்முதல் மைதானம் கழகத்திற்காக வாங்கப் பபட்டது.
மைதானம் தொடர்பாக பல நீதி மன்றங்களில் பலதரப்பட்டவழக்குகளுக்கும் திரு.குலநாயகம் முகம் கொடுத்து வெற்றிபெற்றுக் கொடுத்தவர். இந்த வழக்குகளுக்கு செ. சண்முகசுந்தரம், திரு,யு.குலசிங்கம். க.ஜெயக்கொடி, திரு.எஸ்.இ.துரைசிங்கம், திரு.பெ.ராசரத் தினம். திரு.ஆர்.ஆர்.தர்மரெத்தினம். திரு.சி.கதிரவேற்பிள்ளை, திரு.ந.யோகசிகாமணி ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். குலநாயகத்தின்மீதான வழக்கில் திரு.அமிர்தலிங்கம் கௌரவமாக ஏற்பட்டு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. திரு.குலம் அவர்கள் ஆணக்காப்பகத்திற்கு போஷகராக இருப்பதோடு அதன் யாப்பு விதிகளையும் தயாரித்து தந்துதவியவர்.
நண்பன் குலநாயகம் அவர்கள் தனது ஏகபுத்திரி சுமங்கலாவை வல்வெட்டித்துறைக்கு பல வருடங்களுக்குப்பின் சட்டத்தரணியாக படிப்பித்து எமக்குத் தந்துள்ளார். செல்விசுமங்கலாகுலநாயகம்அவர்கள்திறமைமிக்கஒருசட்டத்தரணியாகவளர்ந்துஎதிர்காலத்தில்நீதியரசராகவேண்டும்எனவல்வைவரலாற்றுஆவணக்காப்பகம்வாழ்த்துகிறது,
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.