தரம் 5 புலமை பரிசில் - புதிய வெட்டுப்புள்ளி வெளியானது
பிரசுரிக்கபட்ட திகதி: 17/11/2014 (திங்கட்கிழமை)
இந்த வருடம் தரம் 5 புலமை பரிசில் பரீட்சையில் தோற்றிய மாணவர்களின் மீள் பரிசீலிக்கப்பட்ட மொத்த சராசரி குறைந்தளவு வெட்டுப்புள்ளி (Overall minimum pass mark) இன்று பரீட்சை திணைக்களத்தால் (Department of Examinations) வெளியிடப்பட்டுள்ளது.
மீள் பரிசீலிக்கப்பட்ட வெட்டுப்புள்ளிகள் பிரகாரம் தமிழ் மொழியில் தோற்றிய மாணவர்களின் சராசரி மொத்த வெட்டுப்புள்ளி 159 இலிருந்து 152 ஆகவும், சிங்கள மொழியில் தோற்றிய மாணவர்களின் சராசரி மொத்த வெட்டுப்புள்ளி 163 இலிருந்து 159 ஆகவும் குறைக்கப்படுகின்றது.
இந்த வருடத்திற்கான வரவு செலவுத் திட்ட பிரேரணையின் (Budgetary proposal) பிரகாரமே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் பயன் பெறும் மாணவர்களின் எண்ணிக்கை 15,000 இலிருந்து 25,000 ற்கு இந்த வருடம் அதிகரிக்கப்பட்டுள்ளது என கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதனால் கூடுதலாக நாடு முழுவதும் 10,000 மாணவர்கள் ரூபா 500/- இலிருந்து 1,500/- ரூபா பெறவுள்ளனர்.
பரீட்சை திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ள புதிய வெட்டுப்புள்ளி விபரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.