தினச்செய்தியின் அனுசரனையுடனும் பருத்தித்துறை பிரதேச செயலகம், பருத்தித்துறை மற்றும் வடமராட்சி உதைபந்தாட்ட லீக்கின் ஒத்துழைப்புடனும் நெற்கொழு கழுகுகள் வி.க மைதானத்தில் நல்லிணக்க உதைபந்தாட்ட காட்சி போட்டியானது நேற்று 04.06.2016 (சனிக்கிழமை) பி.ப 03.30 மணியளவில் நெற்கொழு கழுகுகள் வி.க மைதானத்தில் இடம்பெற்றது.
ஆடல் பாடலுடன் கோலாகலமாக ஆரம்பமான இந்த உதய் பந்தாட்டப் போட்டியில் முதல் பாதியாட்டத்தில் இரு அணிகளும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முதல் பாதியில் இரு அணிகளும் எதுவித கோல்களையும் பெற்றிருக்கவில்லை.
இரண்டாவது பாதியில் கோல் ஒன்றைப் பெற்று போட்டியை தன்வசப்படுத்தியது இராணுவ அணி. ஆனாலும் வடமராட்சி அணி வீரர் பீமா (டயமன்ஸ்) தன் அணிக்காக கோல் ஒன்றினைப் பெற்று ஆட்டத்தை சமப்படுத்தினார். இதனால் போட்டி 1.1 என சம பலத்துடன் நிறைவுற்றது.
வடமராட்சி தெரிவு அணியில் கம்பர்மலை யங்கம்பன்ஸ் அணி சார்பாக 5 வீரர்கள் பங்கு கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
போட்டியில் பங்கெடுத்த வடமராட்சி அணி மற்றும் யாழ் இராணுவ அணியினர்
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.