வல்வையின் மூத்த விளையாட்டு வீரர் தங்கவேல் மரணமானார்
பிரசுரிக்கபட்ட திகதி: 10/04/2019 (புதன்கிழமை)
வல்வையின் பிரபல்யங்களில் ஒருவரும் மூத்த விளையாட்டு வீரருமான திரு.மு.தங்கவேல் அவர்கள் இன்று மரணமானார். இவருக்கு வயது 72.
வல்வை விளையாட்டுக் கழகத்தின் மிக மூத்த உறுப்பினரான திரு.தங்கவேல் அவர்கள் வல்வை விளையாட்டுக் கழகத்தின் தலைவர் ஆக பல வருடங்கள் பொறுப்பு வகித்திருந்ததுடன், 2009 ஆம் ஆண்டின் பின்னர் மிகவும் நலிவுற்றிருந்த வல்வை விளையாட்டுக் கழகத்தை சீரமைப்பத்தில் பெரிதும் பங்காற்றியிருந்தார்..
இவருக்கு மனைவி, இரண்டு மகள்கள் மற்றும் மகன் உண்டு. அன்னாரின் மூத்த மகன் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் உறுப்பினராகவிருந்து, 91 ஆம் ஆண்டில் ஆனையிறவுப் பகுதியில் இடம்பெற்ற மோதல் ஒன்றில் மரணமடைந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் வல்வையில் இடம்பெறவுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
RAJKUMAR PERIYATHAMBY (canada)
Posted Date: April 10, 2019 at 19:01
ஆழ்ந்த இரங்கல் அவரது ஆத்மா சாந்தியடையட்டும்
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.