வாரம் ஒரு பழங்கதை – பட்டினமும் நகரமும் 2 – வல்வையூர் அப்பாண்ணா
பிரசுரிக்கபட்ட திகதி: 22/06/2015 (திங்கட்கிழமை)
பட்டினமும் – பட்டினசபையுமாக இருந்த வல்வையூர் நகரமும் – நகரசபையுமாக 01-06-1971 இல் அந்தஸ்த்துப்பெற்றது. நகரசபையின் தலைவர்களாக மக்கள் சேவையாற்றியவர்கள் விபரங்கள் கீழே:
அமரர் து.நவரத்தினம் J.P
8) அமரர் து.நவரத்தினம் J.P (1971 – 1975)
இவரே புதிய நகரசபையின் “முதற்தலைவர்” ஆவார். பலநோக்குக் கூட்டுறவுச்சங்க முகாமையாளராக நீண்ட காலம் கடமையாற்றியதுடன், ஊரின் பல்வேறு பொது விடயங்களிலும் முன்னின்று உழைத்த பெருமகனும் ஆவார்.
9) அமரர் ச.ஞானமூர்த்தி (01-06-1979 – 31-05-1983)
கட்சி அடிப்படையில் நடைபெற்ற முதற்தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பாக மறைந்த ச.ஞானமூர்த்தி அவர்கள் தலமையில் வெற்றிபெற்ற குழுவினர் நகரசபை நிர்வாகத்தைக் கைப்பற்றினர்.
அமரர் ச.ஞானமூர்த்தி
ஞான மூர்த்தி அப்பா தலவராக இருந்த காலத்தில் பல்வேறு நலத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. ஞானமூர்த்தி அப்பாவின் காலம் நகரின் மறுமலற்சிக்கான காலமாகவே கொள்ளப்பட்டது.
அன்னாரின் காலத்தில் நிறைவேற்றப்பட்ட சில திட்டங்கள் கீழே,
அ) நவீன சந்தையின் முதற்கட்டம் பூர்த்தி செய்யப்பட்டு கடைகள் வழங்கப்பட்டமை
ஆ) ஊரணி மயானத்தைச் சுற்றி மதிற்சுவர் அமைத்தமை
இ) குழாய் மூலமான நன்னீர் திட்டம்
ஈ) பொலிகண்டி – தொண்டைமானாறு – கம்பர்மலை ஆகிய பகுதிகளுக்கு மின்சாரம் வழங்கியமை போன்றவற்றை கோடிட்டுக் காட்டலாம்.
திரு.க.சிவாஜிலிங்கம்
அ) என இலக்கமிடப்பட்ட நவீன சந்தைக் கடைத் தொகுதி திறக்கப்பட போது, நகரசபையின் மக்கள் பிரதிநிதிகளாக இருந்தவர்கள் விபரம் கீழே,
திரு.ச. ஞானமூர்த்தி (தலைவர்)
திரு.செ.கந்தையா
திரு.ந.மயில்வாகனம்
திரு.ந.சு.இரேசந்திரம்
திரு.இ.பாக்கியநாதர்
திரு.ச.கணேசலிங்கம்
திரு.மு.இராசையா
திரு.கணபதிப்பிள்ளை
திரு.இ.திலகநாதன்
நவீன சந்தை திறப்புவிழா 26.05.1983 அன்று நடைபெற்றது.
வல்வை நகரசபை
இ) எனக் குறித்த “குழாய் மூலமான நன்னீர் திட்டம்” பற்றிய மேலதிக தகவல்கள்
தொண்டைமானாறு வீர்கத்திப்பிள்ளை மகா வித்தியாலயம் அமைந்துள்ள வளாகத்தினுள்ளே “பொந்துக் கிணறு” ஒன்று உண்டு. சிறிய ஆழம் குறைந்த 1 ½ அடி உயரத்தில் எப்போதும் நீர் உள்ள – இறைக்க இறைக்க வற்றாத – சுத்தமான நன்னீர் கிணறு அது.
பொந்துக் கிணறு
அந்தப் பொந்துக் கிணற்றிலிருந்து, காட்டுப்புலம் மயானத்திற்கு கிழக்காக – கடற்கரையை அண்மித்த இடத்தில் அமைந்திருந்த நீர்த் தொட்டிக்கு நீர் ஏற்றப்பட்டு, அங்கிருந்து இந்திராணி வைத்தியசாலை வரை – இடையிடையே நீர் ஏந்தும் வசதிகளுடன் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது.
நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக காட்டுப்புலம் நீர்த் தாங்கி தலைகீழாக புரண்டு போனதோடு நீர் விநியோகக் குழாய்களும் சேதமாகின. பின்னர் ஒரு கட்டத்தில் இந்த குழாய் நீர் விநியோகம் நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது.
காட்டுப்புலம் நீர்த் தாங்கி
1983 ஜூன் முதல் மக்கள் பிரதிநிதிகளிடமிருந்து விசேட ஆணையாளரின் (செயலாளர்) நிர்வாகத்திற்கு மாற்றப்பட்டது. இந்த நிலை 24-08-1998 இல் திரு.ம.க.சிவாஜிலிங்கம் பொறுப்பேற்கும் வரை நீடித்தது
திரு.க.சிவாஜிலிங்கம் (24-08-1998 – 07-12-2001)
24.08.1998 இல் நகரசபையின் தலைவராககத் தெரிவு செய்யப்பட்ட இவர், பாராளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்றதும், நகரசபைத் தலைவர் பதவியை இராஜிநாமாச் செய்யும்படியான நிலமை ஏற்பட்டது. இவரது பதவிக் காலத்தில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு செயற் திட்டங்களில் சிலவற்றை கீழே குறிப்பிடலாம்.
வல்வை சனசமூக சேவா நிலையம்
• வீதிகள், ஒழுங்கைகள் திருத்தி அமைக்கப்பட்டதும், மீன் சந்தையின் தற்போதைய அமைப்பில் மாடிக் கட்டடமாக கட்டப்பட்டமையும்
• அம்மன் கோவிலடியில் உள்ள நகரசபைக்குச் சொந்தமான காணியில் நகரசபையின் புதிய அலுவலக கட்டிட வேலையினை ஆரம்பித்து நாலில் மூன்று பங்கு வேலையினை நிறைவு செய்தமை.
• தொண்டைமனாற்று சந்தியில் “நீச்சல் வீரர் நவரத்தினசாமி”” யின் பெயரில் பஸ் தரிப்பு நிலையம் அமைத்ததும், ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்ததும்
• வீடுகளிலும், பொது மலசல கூடங்களிலும் இருந்த “வாளிக் கக்கூசு” முறையை மாற்றி நீரடைப்பு மலசல கூடங்களாக மாற்றியமை
ஊரணி மயானத்தைச் சுற்றி மதிற்சுவர்
• பல்வேறு சந்தர்ப்பங்களிலும், பல்வேறு காரணங்களுக்காகவும் ஊரிலிருந்து இடம்பெயர்ந்த அனைவரினதும், 01-01-2000 க்கு முற்பட்ட அனைத்து வீட்டுவரி – ஆதனவரி நிலுவைகளை அகற்றியமை
• நீண்ட காலமாக விளையாட்டு மைதானமாகப் பயன்படுத்தப்பட்டு வந்த நெற்கொழு மைதானத்தைச் சுவீகரித்து “விளையாட்டு மைதானத் தொகுதி” ஒன்றினை ஏற்படுத்தும் முயற்சியினை மேற்கொண்டமை
• வல்வை சனசமூக சேவா நிலையத்தின் பழைய கட்டடத்தை அகற்றி, கீழே பஸ் தரிப்பிடமாகவும், மேல் மாடியில் சனசமூக சேவா நிலையமாகவும் அமைத்தமை போன்றவற்றை குறிப்பிட்டுச் சொல்லலாம்.
திரு.ந.அனந்தராஜ்
திரு.ந.அனந்தராஜ் (23.07.2011 – 31.12.2014)
இவரது பதவிக் காலத்தில் நகரத்திற்கு வேண்டிய பல்வேறு நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. அவற்றுள் சில:
• நகரசபை எல்லைக்குட்பட்ட வீதிகள், ஒழுங்கைகள் புனரமைக்கப்பட்டு புதிய வீதிகளாக மாற்றம்பெற்றமை.
• செல்வச்சன்னிதியில் பழைய “ஆனாந்தாச்சிரமம்” இருந்த இடமருகே (ஆற்றின் கிழக்காக) த.அகிலேந்திரஐயர் அவர்களால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட காணியில், தொண்டைமானாறு வெளிக்கள நிலையம் ரூபா 3 கோடி செலவில் மாடிக் கட்டடமாக
தொண்டைமானாறு வெளிக்கள நிலையம்
கட்டப்பட்டிருக்கின்றது. அதனை அண்மித்தபடி உயர்வகுப்பு மாணவர்களின் செய்முறைப் பரிசோதனை கூடமாகவும் – வெளிக்கள ஆய்வு நூலகமாகவும் பயன்படுத்துவதற்கு ஏற்றபடி இன்னொரு மாடிக் கட்டத்திற்கான வேலைகளும் நடைபெற்று வருகின்றன.
• புதிய நகரசபைக் கட்டட வேலைகள் பூர்த்தி செய்யப்பட்டு, 01-03-2013 இல் திறந்து வைக்கப்பட்டது.
• நவீன சந்தையின் 2 ஆம் கட்ட வேலைகள் (காய்கறிச் சந்தைத் தொகுதி) பூர்த்தி செய்யப்பட்டு 14-06-2014 அன்று சமயச் சடங்குகளுடன் திறந்து வைக்கப்பட்டது.
வல்வையூர் அப்பாண்ணா
• தெணியம்பையில் மக்கள் வாழ்விடங்களின் மத்தியில் நீண்ட காலமாக இயங்கி வந்த சாராயத் தவறணையை அங்கிருந்து அகற்றியமை இவரது பெரும் சாதனையாக கருதப்படுகின்றது. இது விடயம் நீதிமன்றம் சென்ற போதும், நகரசபைக்குத் சார்பானதாக வழங்கப்பட்ட தீர்ப்பானது இவருக்கு பெருவெற்றியாக அமைந்தது.
குறிப்பு
இதுவரை இவரின் 14 ஆக்கங்கள் எமது இணையதளத்தில் பிரசுரமாகியுள்ளன.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.