கடந்த சுதந்திர தினத்தன்று வெளியிடப்பட்டுள்ள புதிய ஆயிரம் ரூபா நாணயத்தாள் அளவு, முக்கிய நிறங்கள் மற்றும் பாதுகாப்பு விடயங்களில் (The size, predominant color and the security features) பொதுவாக ஏற்கனவே புழக்கத்தில் உள்ள ஆயிரம் ரூபா தாளை ஒத்து இருந்தாலும் சில புதிய விடயங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன. அவையாவன,
தாளின் முற்பக்கத்தில்
70 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் லோகோ இடது பக்கக்கீழ் மூலையில் பழைய தாளில் உள்ள வண்ணத்துப்பூச்சிக்குப் பதிலாகவும், விகாரை, வல்லிபுரக்கோயில், மசூதி மற்றும் மடு தேவாலாயம் பொறிக்கப்பட்டுள்ளதுடன், நான்கு இனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்துபவர்களின் உருவங்களும் பொறிக்கப்பட்டுள்ளன. தாளின் நடுப்பக்கத்தில் பழைய தாளில் உள்ள ரம்பொட சுரங்கப்பாதைக்குப் (Ramboda Tunnel) பதிலாகவும் இடம்பெற்றுள்ளன. மேலும் தாளின் தொடர் இலக்கம் பழைய தாளில் S இல் ஆரம்பமாகின்றது. புதிய தாளில் S70 என ஆரம்பமாகின்றது. (S என்பது Srilanka வையும் 70 ஆனது எழுபதாவது சுதந்திரதினத்தையும் குறிக்கின்றது.
தாளின் பிற்பக்கத்தில்
தாளின் பிற்பக்கம் தற்பொழுது புழக்கத்தில் உள்ள 11 ஆவது தாள் காசுகளின் வடிவத்தை ஒத்தே காணப்படுகின்றது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.