சிங்கபூரைச் சேர்ந்த Startup F-Drones முதன் முதலாக கப்பல் ஒன்றுக்கு ட்ரோன் மூலம் பொருட்களை அனுப்பி (Beyond visual line of sight - BVLOS - drone delivery).சாதனை படைத்துள்ளது. கடந்த வாரம் குறித்த நிறுவனத்தின் ட்ரோன் கப்பல் ஒன்றுக்குத் தேவையான 2 கிலோ எடைகொண்ட விட்டமின்கள் அடங்கிய பொதியை சுமார் 2.7 கிலோமீட்டர் தூரம் கடந்து சேர்த்துள்ளது.
இவ்வகை F-drone கள் மூலம் செலவை 80 வீதம் கட்டுப் படுத்த முடியும் என்றும், தற்போதைய Covid-19 காலத்தில் மனித தொடர்புகளைக் குறைக்கு முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய F-drone கள் 5 கிலோ எடை கொண்ட பொருட்களை 5 கிலோ மீட்டர் தூரம் வரையே கொண்டு செல்லக் கூடியவை. ஆனாலும் எதிர்காலத்தில் இவற்றின் திறனை அடுத்த வருடம் 100 கிலோ எடை மற்றும் 100 கிலோ மீட்டர் தூரம் வரை அதிகரிக்க முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.