தமிழ் மக்கள் பேரவையால் ஆறு அம்ச கோரிக்கைகளை முன்வைத்து இன்று யாழ்ப்பாணத்தில் எழுக தமிழ் பேரணி இடம்பெற்று வருகின்றது.
யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்றலில் இருந்தும் நல்லூர் கந்தசுவாமி ஆலய முன்றலில் இருந்தும் இன்று காலை ஆரம்பமான பேரணிகள் நண்பகல் யாழ் முற்றவெளியைச் சென்றடைந்தன.
ஆயிரக் கணக்கான மக்கள் பல்வேறு கோசங்களை எழுப்பியவாறு கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர். அத்தோடு எழுக தமிழ் பாடலும் ஒலிபரப்பு செய்யப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து எழுக தமிழ் பிரகடனம் வாசிக்கப்படவுள்ளது.
பேரணிக்கு ஏராளமான அமைப்புக்கள் ஆதரவு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.