எம்.ஜி ஆரின் 101 ஆவது பிறந்த தினம் நேற்று வல்வையில் கொண்டாடப்பட்டது
பிரசுரிக்கபட்ட திகதி: 18/01/2018 (வியாழக்கிழமை)
தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ராமச்சந்திரன் (எம்.ஜி.ஆர்) அவர்களின் 101 ஆவது பிறந்ததினம் நேற்று மாலை வல்வெட்டித்துறையில் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
பிற்பகல் 04.30 மணியளவில் வல்வை ஆலடி பகுதியில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர் சிலையின் அருகே மங்கள விளக்கேற்றலுடன், எம்.ஜி.ஆர் அவர்களின் படத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டது.
தி.ஜெயராஜ் தலைமையில் நடைபெற்ற நிகழ்விற்கு ஆசியுரையினை தமிழ் முகில் மற்றும் சோ. தண்டபணிகதேசிகர் (வல்வை முத்துமாரியம்மன் ஆலய பிரதமகுரு) வழங்கியிருந்தார்கள்.
பிரதமவிருந்தினராக ஆ.சிவநாதன் (அதிபர் - புற்றளை மகாவித்தியாலயம்) அவர்களும், கௌரவ விருந்தினராக ச.பிரசாத் (செயலாளர் வல்வெட்டித்துறை நகராட்சி மன்றம்) அவர்களும், சிறப்பு விருந்தினராக N.சிவரட்ணம் ( இலங்கை வங்கி வடமாகாண ஒய்வு நிலை உதவி போது முகாமையாளர்) அவர்களும், சி.சிவபாலசிங்கம் (முனால் கிராம சேவையாளர்) அவர்களும், பொன்.சுகந்தன் (பண்டிதர்) அவர்களும், பொன்.சக்திவேல் (அருட்கவி அரசன்) அவர்களும் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தார்கள்.
எம்.ஜி.ஆர் அவர்களின் 101 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு கேக் வெட்டப்பட்டதுடன், இனிப்பு மற்றும் சிறுவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டன.
மேலும் எம்.ஜி.ஆர் நற்பணி மன்றத்தால் இலவச பாட உபகரணம் வழங்கப்பட்டது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.