Evertree Fruit Products (pvt) Ltd நிறுவனத்தின் விநியோக நடவடிக்கைகள் வல்வையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மேற்படி பழச்சாறு நிறுவனமானது கடந்த ஜனவரி மாதம் 23ஆம் திகதி உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது அனைவரும் அறிந்ததே. பல சோதனைகளைத் தாண்டி தனது முதலாவது உற்பத்தியான மாம்பழ பானத்தை ஜூலை 6 ஆம் திகதி புதன்கிழமை வல்வையில் சந்தைப்படுத்த ஆரம்பித்துள்ளது. இந்நிறுவனம் தனது உற்பத்திகளை Evertree என்னும் பெயரில் சந்தைப்படுத்த ஆரம்பித்துள்ளது.
மேற்படி பழச்சாறு தயாரிப்பதற்கு உள்ளூர் பழங்களே பயன்படுத்துவது குறிப்பிடத்தக்கது. இதனால் உள்ளூர் பழ உற்பத்தியாளர்கள் மிகவும் பயன் அடைவார்கள். மேலும் தொழிற்சாலையில் வேலை செய்வதற்கும் சந்தைப்படுத்தளுக்கும், இளைஞர் யுவதிகள் உள்வாங்கப்படவுள்ளார்கள். வல்வையில் முதன் முதலாக ஆரம்பிக்கப்பட்டுள்ள இத் தொழிற்சாலை பலரது கவனத்தையும் ஏற்ர்த்துள்ளது .
கீழே படங்களில் பழச்சாறு அமைந்த கட்டத்தொகுதி, பழச்சாறு உற்பத்தி........ முதல் பழச்சாறு விநியோகம் வரையான காட்சிகள் ஒன்றன் பின் ஒன்றாக காட்டப்பட்டுள்ளன.
உள்ளுரில் அமையும் இந்த உற்பத்தியை ஊக்கப்படுத்தி இது போன்று மேலும் சில உற்பத்திப் பொருட்கள் வளர சிறு தொழில் வாய்ப்புக்கள் பெருக வழி வகுப்போம்..
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
Prakash (uk)
Posted Date: July 12, 2016 at 11:38
வெற்றிக்கு வாழ்த்துக்கள
Nandakumar (U.A.E)
Posted Date: July 11, 2016 at 18:57
Dear All,
Well done & congratulations.
I hope you will achieve you targets soon.
Regards
K.Nandakumar
Dubai
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.