வல்வை EVER TREE FRUIT PRODUCT இரண்டாவது வருடத்தை நிறைவு செய்தது
பிரசுரிக்கபட்ட திகதி: 26/01/2018 (வெள்ளிக்கிழமை)
வல்வெட்டித்துறையில் இயங்கிவரும் EVER TREE FRUIT PRODUCT (PVT LTD) தனது இரண்டாவது ஆண்டு நிறைவை கடந்த 23ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அன்று கொண்டாடியது.
அன்றைய தினம் தொழிற்சாலை மற்றும் அலுவலகப் பணியாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது. மேலும் உற்பத்தி தொடர்பான விழிப்புணர்வை மேம்படுத்தும் முகமாக விளம்பர துண்டு பிரசுரங்களும் அன்பளிப்பு பொருட்களும் அறிமுகப்படுத்தப்பட்டு சந்தைப்படுத்தும் பணியாளர்களிடம் கையளிக்கப்பட்டது.
EVER TREE தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் பழச்சாறு பானம் யாழ் மாவட்டத்தில் மட்டுமல்லாது தென்பகுதியில் சந்தைப்படுத்துவது குறிப்பிடத்தக்கது.
மற்றும் இவ் இயற்கைப் பழச்சாறு, பானம் என்பன திருமண நிகழ்வுகள், ஒன்றுகூடல்கள், விளையாட்டுப்போட்டிகள் போன்ற பொது நிகழ்ச்சிகளுக்கும் வழங்கப்பட்டு வருகின்றதுடன் இந்நிறுவனம் சந்தைப்படுத்தலை விரிவு படுத்துவதற்கும் உற்பத்திகளை அதிகரிப்பதற்கும் நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இதன் மூலம் உள்ளூர் உற்பத்திகளை மேம்படுத்துவதற்கும் வேலை வாய்ப்புக்களை அதிகரிப்பதற்கும் உத்தேசித்துள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.