இலங்கையின் வடபுலத்தில், ஒரு பிரதேசத்தில் மட்டும் என்றளவில் நடைபெற்றுவரும் மிகவும் பிரபல்யமான விழா இதுவாகும். வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் இறுதி நாளான தீர்த்தோற்சவத்தின் அன்று இரவு எடுக்கப்படும் அதிக பணம் மற்றும் பொருட்ச்செலவிலான இவ்விழாவில் கலையம்சங்களும் வேறுபட்ட விதங்களில் வெளிப்படுத்தப்படுதல் மிகவும் குறிப்பிடத்தக்கது.