உடுப்பிட்டிமகளிரில் கல்வி பயின்ற இலக்கியா சிதம்பரநாதனுக்கு அமெரிக்காவின் அதியுயர் சர்வதேச விருது
பிரசுரிக்கபட்ட திகதி: 18/03/2017 (சனிக்கிழமை)
நிலையான திரட்டுக்கள் தொகுதி 12 இன் வெற்றியாளாராக செல்வி இலக்கியா சிதம்பரநாதன் தெரிவு செய்யப்பட்டிருப்பதாக அமெரிக்காவை தளமாக கொண்டியங்கும் நிலையான ஆராச்சி வலையமைப்பு (The Sustainability Research Network ) தெரிவித்துள்ளது.
இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குரிய வெடி பொருட்கள் மற்றும் இரசாயன போர் முனை முகவர்களை செயல் இழக்கச் செய்வதற்கான உயிரியல் மருத்துவ தொழில் நுட்பங்களை அமுல் படுத்துதல் (Implementing Bioremediation Technologies to Degrade Chemical Warfare Agents and Explosives from War Affected Regions in Sri Lanka) என்ற ஆய்வுக் கட்டுரைக்காக சர்வதேச அளவில் பிரபலம் வாய்ந்த இந்த விருது இலக்கியா சிதம்பரநாதனுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த விருதுக்காக அதியுயர் தகமைகளுடன் பல்வேறு தரப்பினர் மிகத் தரமான கட்டுரைகளை விண்ணப்பித்திருந்தபோதும், அவற்றில் 12 ஆய்வுக் கட்டுரைகளே உயர் தெரிவுக்கு அனுமதிக்கப்பட்டிருந்தது. இவை மிகவும் நுண்ணிய ஆழமான ஆராய்வுக்கு உட்படுத்தப்பட்டு (Peer-review process), அவற்றிலிருந்து இலக்கியா சிதம்பரநாதனின் ஆய்வுக் கட்டுரை முதலாவதாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.
வல்வெட்டித்துறை இலக்கணாவத்தையை பிறப்பிடமாகக் கொண்ட இலக்கியா சிதம்பரநாதன் உடுப்பிட்டி மகளிர் கல்லூரியில் தரம் 1 முதல் 13 வரை கல்வி கற்றிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னர் தனது BSC பட்டப் படிப்பை பங்காள தேசத்திலும், உயர் படிப்பை ஹோலந்திலும் மேற்கொண்டு தற்பொழுது ஹோலந்தில் வசித்து வருகின்றார்.
ஆங்கிலத்தில் 27 பக்கங்களில் இலக்கியா சிதம்பரநாதன் எழுதிய மேற்குறித்த ஆய்வுக் கட்டுரை சில தினங்களில் Valvettithurai.org இல் பிரசுரமாகும்.
இந்த விருதின் முக்கியத்துவத்தை உணர்ந்துகொள்ள கீழ்வரும் இணைப்பில் எமது ஆங்கில செய்தியையும் படியுங்கள்
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
R.Sothivel (Srilanka)
Posted Date: March 19, 2017 at 18:30
முகவர்களை செயல் இழக்க செய்வதா? அதன் அர்தம் என்ன?
RAJKUMAR PERIYATHAMBY (canada)
Posted Date: March 19, 2017 at 02:46
மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் ;
Ruby (Uk)
Posted Date: March 18, 2017 at 19:03
Congrats ilakkiya
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.