இலங்கையின் வட பகுதிக்கு அருகாமையில் நகரவுள்ள தீவிர தாழமுக்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 04/12/2017 (திங்கட்கிழமை)
இலங்கையிலிருந்து சுமார் 850 கடல் மைல்கள் தொலைவில் கிழக்காக வங்காள விரிகுடா கடற்பரதேசத்தில் நிலவும் தாழமுக்க நிலை (Low Pressure) எதிர்வரும் 24 மணித்தியால காலப்பகுதியில் வலுவடையக்கூடும் (Depression) என்று இலங்கை மற்றும் இந்திய வளிமண்டலவியல் திணைக்களங்கள் அறிவித்துள்ளன.
எதிர்வரும் 3-4 தினங்களில் இந்த தாழமுக்க தாழ்வு நிலை இந்த கட்டமைப்பின் மேற்குப்பகுதியில் வடமேல் திசையை நோக்கி நகர்ந்து மத்திய வங்காள விரிகுடாவில் கடற்பிரதேசத்தின் ஊடாக வடக்கு தமிழ்நாடு – தெற்கு ஆந்திரா பிரதேச கரையை நோக்கி நகரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
குறித்த தாழமுகதால் இலங்கையின் வட பகுதிக்கு எதுவித நேரடிப் பாதிப்புக்களும் இல்லை.
இதற்கமைவாக எதிர்வரும் 5 ஆம் மற்றும் 6ஆம் திகதிகளில் இலங்கைக்கு கிழக்கு திசையில் இந்த கட்டமைப்பு நாட்டிற்கு அருகாமையில் நகரக்கூடும். எதிர்வரும் சில தினங்களில் விசேடமாக நாளை முதல் வங்காள விரிகுடா கடற்பிரதேசத்தலும் நாட்டை சுற்றியுள்ள கடற்பிரதேசத்திலும் காற்றின் வேகம் அதிகரிக்க கூடும் . மேலும் வங்காள விரிகுடா கடற்பிரதேசத்தில் காற்றின் வேகம் 90 கிலோமீற்றர் முதல் 100 கிலோமீற்றர் வரையிலும் நாட்டை சுற்றியுள்ள ஆழமான மற்றும் ஆழமற்ற கடற்பிரதேசத்தில் காற்றின் வேகம் 70 முதல் 80 கிலோமீற்றர் வரையிலும் நாட்டிற்குள் விசேடமாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் 50 முதல் 60 கிலோமீற்றர் வரையிலும் அதிகரிக்ககூடும் எனவும் அறிவிக்கப்ட்டுள்ளது.
இதேவேளை கடந்த 29 ஆம் திகதி தென் இலங்கையூடு சென்ற தீவர தாழமுக்கம் தற்பொழுது அதி தீவிர புயலாக மாறி (Very severe cyclonic storm) அராபியக் கடலில் வடக்கு திசையில் தொடர்ந்து நகர்ந்து வருகின்றது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.