கடந்த 5 தினங்கள் முன்பு அந்தமான் தீவுக்கு தெற்காக வங்காள விரிகுடாவில் உருவான தாழமுக்கம் (Low Pressure), தற்பொழுது வலுவடைந்து தீவிர தாழமுக்கமாக (Depression) மாறியுள்ளது. இத் தீவிர தாழமுக்கமானது இன்று காலை வங்காள விரிகுடாவின் மத்திக்கு சற்று மேற்காக அகலாங்கு 14.0 N, நெட்டாங்கு 086.0 E என்னும் பகுதியில் நிலை கொண்டிருந்தது.
தொடர்ந்து வட மேற்குத் திசையில் நகரும் இத் தீவிர தாழமுக்கமானது இன்னும் சில மணி நேரங்களில் புயலாக (Cyclonic Storm) மாறி, வடக்கு - வட கிழக்கு திசையாக வளைவான ஒரு நகர்வை மேற்கொண்டு பங்காள தேசம் - மியான்மார் கரைகளைக் கடக்கவுள்ளது.
அமெரிக்காவின் கடற்படை இணையதளத்தால் வெளியிடப்பட்டுள்ள புயலின் நகர எதிர்பார்க்கப்படும் பாதை கீழே காட்டப்பட்டுள்ளது.
வங்காள விரிகுடாவில் இந்த வருடம் ஏற்பட்டுள்ள ஐந்தாவது புயல் இதுவாகும். இதற்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.