டென்மார்க்கின் மிகச் சிறந்த மாணவர்களில் ஒருவராக இளங்கோ ராமரட்ணம்
பிரசுரிக்கபட்ட திகதி: 29/06/2017 (வியாழக்கிழமை)
டென்மார்க்கில் உள்ள நிகுபிங் பல்ஸ்ரர் நகரத்தில் வாழ்ந்துவரும் வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகக் கொண்ட வைத்திய கலாநிதி. திரு. ராமரட்ணம் வைரமுத்து ( சுபாஸ்) தம்பதியரின் அருமை மகனான இளங்கோ அந்த நகரத்தில் உள்ள வர்த்தக உயர்நிலை கல்லூரியில் நடைபெற்ற பரீட்சையில் சராசரியாக 12.9 புள்ளிகள் பெற்று டென்மார்க்கின் சூப்ப ஸ்ருடன்ற்களில் ஒருவராக வெற்றி பெற்றுள்ளார்.
இவருடைய தந்தையார் திரு.வீ.ராமரட்ணம் அவர்கள் டென்மார்க் வந்து வைத்தியத்துறை கல்வியை கற்று இப்போது வைத்தியராக பணியாற்றி வருகிறார், தந்தை வழியில் தனயன் புரிந்த சாதனையாக இது இருக்கிறது.
தந்தையார் திரு.ராமரட்ணம், வல்வையின் (இலங்கையின்) ஒரேயொரு பெண் கப்பல் அதிபராக விளங்கிய தங்கம் அவர்களின் பூட்டான் ஆவார்.
அதேவேளை இவருடைய தாயார் திருமதி. ரா. கலைவாணியும் சிறந்த சாதனைப் பெண்மணியே இவர்; வல்வையின் புகழ்பூத்த இயற்றமிழ் போதனாசிரியர் சங்கரவைத்தியலிங்கனார் குடும்பத்தை சேர்ந்தவராகும்.
ஆறுமுகநாவலர் காலத்தில் அவருக்கு இணையான சாதனை படைத்தவர் இயற்றமிழ் போதனாசிரியர் சங்கரவைத்தியலிங்கனார் ஆகும், அவருடைய மகன் பண்டிதர் சங்கரவைத்தியலிங்கனின் பேர்த்தியாரே இளங்கோவின் தாயாராகும்.
வைத்தியர் ராமரட்ணம் அவர்களின் தந்தையார் திரு. வைரமுத்து அவர்களும் வைத்தியத்துறையில் முத்திரை பதித்தவராகும், கல்வி, கற்றல் போன்ற துறைகளில் மிகுந்த ஆர்வமுள்ள இரு குடும்பங்களின் நெடிய பாரம்பரியத்தில் இருந்து வந்த இளங்கோ டென்மார்க்கில் உள்ள தமிழ் மக்களுக்கும் தாயக மக்களுக்கும் தனது பரீட்சை முடிவுகளால் பெருமை தேடித்தந்துள்ளார்.
இருபத்தி நான்கு 12 புள்ளிகளும் ஏழு 10 புள்ளிகளும் எடுத்துள்ளார், ஆகவே இவருடைய சராசரி புள்ளி நிலை பரீட்சை கணக்கீடுகளின் அடிப்படையில் 12.9 ஆகும்.
டென்மார்க்கில் ஒரு பாடத்திற்கு வழங்கப்படும் அதிகூடிய புள்ளி 12 ஆகும், அதையும் தாண்டி போணஸ் புள்ளிகளுடன் 12.9 புள்ளிகள் பெற்று சூப்பர் ஸ்ருடன்ற் ஆக மாறியிருக்கிறார்.
அசாதாரண திறமையுடைய ஒரு மாணவனாலேயே இந்த உச்சத்தை தொட முடியும்.
டென்மார்க்கில் இன்றைய காலத்தில் சர்வதேச வர்த்தகக் கற்கைக்கான சி.பி.எஸ் பல்கலைக்கழகத்தில் இடம் பெறுவதற்கு இது போன்ற அதி உயர் புள்ளி அவசியமாகும். டென்மார்க்கிலேயே அதி கூடிய திறமை மிக்க மாணவர்களுக்கே இப்பல்கலைக்கழகத்தில் இடம் கிடைக்கும்.
ஆர்வம் இருந்தால் அந்த பல்கலைக்கழகத்திற்கு போவதற்கான வாய்ப்பு இவருக்கு தாராளமாக இருக்கிறது.
இளங்கோ ராமரட்ணம் இயல்பாகவே பரந்த ஞானம் உள்ள ஒருவராக இருப்பதாலும், இளம் வயதிலேயே பல நாடுகளுக்கு போன அனுபவமுள்ள ஒருவராகவும் இருப்பதால் அவருடைய எதிர்காலம் பிரகாசமாக இருக்கிறது.
தான் பரீட்சைக்காக மிகவும் கஷ்டப்பட்டு உழைத்ததாகவும், பயத்துடன் அதை எதிர் நோக்கியதாகவும் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
அவர் ஆற்றல் உள்ள மாணவர், மகிழ்ச்சியான மாணவர், இந்த அதி உயர் புள்ளியை பெறுவார் என்பதில் எமக்கு சந்தேகம் எதுவும் இருக்கவில்லை என்று வர்த்தக உயர்நிலைப்பள்ளி ஆசிரியை ஒருவர் கூறினார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.