வங்காள விரிகுடாவில் உருவாகியிருந்த தாழமுக்கம் தற்பொழுது புயலாக மாறியுள்ளது.இதற்கு நிவர்(NIVAR) எனப் பெயரிட்டப்பட்டுள்ளது.
வடக்கு வடமேற்கு திசையில் நகரும் இந்தப் புயல் அடுத்த சில மணி நேரங்களில் கடும் புயலாக மாறி (Severe cyclonic storm) பருத்தித்துறைக்கு மேலாக நகர்ந்து தமிழகத்தின் தென்கிழக்கு கரையை தாக்கவுள்ளது.
இதே வேளை குறித்த புயலினால் யாழ்ப்பாணம் உட்பட்ட இலங்கையின் வடபகுதியில் தொடர்ந்து பலத்த காற்று வீசி வருவதுடன் அவ்வப்போது கடும் மழையும் பெய்து வருகின்றது.
குறித்த புயலினால் பருத்தித்துறையிலேயே அதிகளவு மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.