சென்னையை வலுவாக தாக்கிக் கொண்டிருக்கும் வர்தா புயல்
பிரசுரிக்கபட்ட திகதி: 12/12/2016 (திங்கட்கிழமை)
வங்காள விரிகுடாவில் தாழமுக்கமாக உருவாக்கி புயலாக மாறி மேற்கு திசையில் நகர்ந்து கொண்டிருந்த வர்தா புயல் இந்திய நேரம் பிற்பகல் 1 மணியளவில் சென்னையை எட்டியுள்ளது.
மணிக்கு சராசரியாக 60 தொடக்கம் 70 வரை கடல் மைல்கள் வேகத்தில் காற்றுடன், மணிக்கு சுமார் 10 கடல் மைல்கள் வேகத்தில் புயல் நகர்ந்து கொண்டிருக்கின்றது.
சுமார் 30 கடல் மைல்கள் சுற்றளவு உள்ள புயலின் மையப்பகுதி இந்திய நேரம் சுமார் 2.30 மணியளவில் சென்னையை அண்டிக் கடக்கவுள்ளது.
குறித்த புயலின் காரணமாக வீதிகளில் ஏராளமான மரங்கள் முறிந்து வருவதுடன் மழை வெள்ளமும் ஏற்பட்டு வருகின்றது.
கீழே படங்களில் சென்னை மத்திய பகுதியான கீழ்பாக்கத்தின் மில்லேர்ஸ் வீதியின் காட்சியினைக் காணலாம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.