40 வருடத்தில் 2,400 கிலோமீட்டர் பிரயாணம் செய்த முதலாவது புயல் ஒக்கி
பிரசுரிக்கபட்ட திகதி: 08/01/2018 (திங்கட்கிழமை)
வங்காள விரிகுடாவில் உருவாகி மன்னார் வளைகுடா ஊடாக அரபியக் கடலின் வடக்கு எல்லை வரை குஜராத் கரையிலிருந்து மிக தொலைவு வரை 2,400 கிலோமீட்டர்கள் வரை கடந்த 40 வருடத்தில் பிரயாணம் செய்த முதலாவது புயல் (severe cyclonic storm) ஒக்கி (Ockhi) இந்திய வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஒக்கி வங்காள விரிகுடாவில் தீவிர தாழமுக்கமாக (depression) கடந்த நவம்பர் 29 ஆம் திகதி உருவாகி கன்யாகுமரிக்கு கரைக்கு அப்பால் நொவெம்வர் 30 ஆம் திகதி புயலாக (cyclone) மாறியது. பின்னர் அது மீண்டும் தாழமுக்கமாக மாறி வலுவடையும்வரை குஜராத் (Gujarat) கரைக்கு அப்பால் வரை சென்றது.
1922 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வங்காள விரிகுடாவில் புயல் ஒன்று மேற்காக 4000 கிலோ மீட்டர்கள் வரை நகரந்து யேமென் (Yemen) கரை வரை சென்றிருந்தது.
நவம்பர் 1966, நவம்பர் 1977, நவம்பர் 1978 ஆம் ஆண்டுகளில் வங்காள விரிகுடாவில் உருவாக்கியிருந்த புயல்கள் 3000 கிலோமீட்டர் நகரந்து தமிழகத்தின் மேலாக அராபியக் கடல் வரை சென்றிருந்தன. ஆனாலும் இவை கன்னியாகுமாரியைத் தாக்கவில்லை, மாறாக அகலாங்கு 10 பாகை வடக்குக்கும் மேலாக சென்றன.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.