முதலில் இந்த இணையத்தை நடாத்தும் பொறுப்பாளர்கள்,பதிவு ஏற்றுபவர்கள், எழுதுபவர்கள் என்று அனைவருக்கும் வாழ்த்துகளும் பாராட்டுகளும்.பார்த்து படிப்பவர்களுக்கும் சேர்த்துத்தான். வாழ்த்துகள். வல்வெட்டித்துறை.org இணையம் தனது நான்காவது வருடத்தை தாண்டி ஐந்தாவது ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ளது..
இந்த நான்கு வருடத்திலும் அனேகமாக ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் வல்வெட்டித்துறை.org இணையம் பார்ப்பேன்.
இப்போதைய ஊர்களின் இணையங்கள் வெறுமனே போட்டோ குவியலாக,புகைப்பட கண்காட்சி போன்று இருப்பதில் இருந்து வல்வெட்டித்துறை.ORG இணையம் தன்னை அதன் ஆரம்பத்தில் இருந்தே வித்தியாசப்படுத்தி வந்துள்ளதை அவதானிக்கிறேன்.
அதிகமான ஊர் இணையங்களுக்கும் பேஸ்புத்தகத்துக்கும் பெரீய வித்தியாசங்கள் எதுவுமே தெரிவதில்லை..வெறுமனே படங்கள்.. படங்களுக்கான ஒற்றை தலைப்பு என்று அதே பேஸ்புத்தக மானியோ தான்.
ஆனால் வல்வெட்டித்துறை.ORG எழுத்துக்கள் (Texts), விளக்கங்கள் என்று அவற்றுக்கே முக்கியத்துவம் கொடுப்பதாலோ என்னவோ மற்றையவற்றில் இருந்து வித்தியாசப்படுத்தி நிற்கிறது.அதனாலேயே அதிகம் அது கவர்கிறதோ என்னவோ..இதனையே தொடருங்கள்.
இன்று இவ்வளவு பேரினதும் தினசரி பார்வைக்கு உரியதாக வல்வெட்டித்துறை.ORG இணையத்தை கொண்டுவந்ததன் பின்னால் இருக்கும் உழைப்பு மெச்சத்தக்கது.வாழ்த்துகள்.
நிறைய சவால்கள் இருக்கின்றன..அதில் முக்கியமானது, 2009 க்கு பின்னர் தமிழ்தேசியம் என்ற பெரும் சமூகவாழ்வுமுறையானது கலைக்கப்பட்டு, பிரிக்கப்பட்டுள்ளது..
அதன் ஒவ்வொரு தாக்கமும் ஊர்கள் ஒவ்வொன்றிலும் பிரதி பலிக்கின்றது.. கட்டுமரம் ஒன்றின் பிணைச்சல் அவிழ்ந்தால் ஒவ்வொரு மரமும் தனியாவது போல..
ஊர்களுக்குள் இருந்த தேசிய எண்ணம் பலவந்தமாக அழிக்கப்பட்ட பின்னர் ஒழுங்கை சார்ந்த கடற்கரை சார்ந்த, தெரு சார்ந்த குறுகிய குழுவாதம் முன்னெழுந்து வந்துள்ளது..இது ஒருவகையான பழங்குடி(tribal) மனப்பான்மை ஆகும். இது இன்னும் பிரிந்து வகுப்பு தோழர்கள், வகுப்பின் ஒரே வாங்கில் தோழர்கள் என்று இன்னும் சிறுசிறு குழுவாக மாறும்.
வருங்காலத்தில்;
வல்வெட்டித்துறை எனும் பெரும் நகராட்சி பகுதி ஒன்றின் இணையம் இத்தனை குறுங்குழுக்களினதும் நடுநிலைமையான ஒரு இணையமாக தன்னை கொண்டுபோவது சிரமம் எனினும் வல்வெட்டித்துறை.ORG இணையம் அதனை செய்யும் என நம்புகிறேன். அந்த நம்பிக்கையுடனும் எதிர்பார்ப்புடனும் என்றும் உங்களை வாழ்த்துகிறேன்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
karmegasundaram vasanthan (Australia)
Posted Date: October 25, 2016 at 21:39
WELL DONE GOOD WORDS
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.