கொழும்பு துறைமுகம் 2018ம் ஆண்டின் முதல் 6 மாத காலத்தில் உலகின் 30 பிரதான கொள்கலன் வழிநடத்தல் துறைமுகங்களில் முதலிடத்தைப் பெற்றுள்ளது.
அல்பா-லைனர் (Alpha Liner) அறிக்கைகளுக்கு அமைய இந்த வருடத்தின் முதல் 6 மாத காலப்பகுதியில் கொள்கலன் ஏற்றி-இறக்கல் மூலம் கொழும்பு துறைமுகம் 15.6 சதவீத வளர்ச்சியை எட்டியிருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதுவரை இந்த கொள்கலன்களை ஏற்றி இறக்கும் செயற்பாடுகளில் சிங்கப்பூர் துறைமுகமே முன்னிலை வகித்து வந்தது. கடந்த 6 மாத காலப்பகுதிக்குள் இது 11 தசம் 6 சதவீத வளர்ச்சியையே காட்டியுள்ளது.
அல்பா-லைனர் அறிக்கைப்படி சிங்கப்பூர் துறைமுகம் 2 ஆம் இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளது. 8.6 சதவீத வளர்ச்சியைக் காட்டும் சீனாவின் கொன்சூ துறைமுகம் 3 ஆம் இடத்தைப் பெற்றுள்ளது.
துறைமுகங்கள் மற்றும் சமுத்திர சேவைகளுடன் சம்பந்தப்பட்ட துறைமுக செயற்பாடுகள் முனைய வழிநடத்தல் செயற்பாடுகள் சேவை, விநியோக நிலையங்கள், நிதி நிறுவனங்கள் போன்றவற்றின் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு அல்பா- லைனர் இந்த அறிக்கையைத் தயாரித்துள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.