நெடியகாடு பிள்ளையார் ஆலய வீதியில் 10 அடி உயர தென்னை மரங்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 18/09/2017 (திங்கட்கிழமை)
வல்வை நெடியகாடு பிள்ளையார் கோயில் வெளி வளாக வீதியில் தென்னை மரங்கள் இப்பகுதி இளைஞர்களால் நாட்டப்பட்டுவருகின்றன. வழமையைப் போல் அன்றி சுமார் 10 அடி உயரம் வரை வளரந்துள்ள தென்னை மரங்களே அயற்ப்பகுதிகளில் இருந்து அகழ்ந்து எடுக்கப்பட்டு நாட்டப்பட்டுள்ளன.
வல்வை நகரப் பகுதியில் குறிப்பிடக் கூடிய பாரிய மரங்கள் நாட்டப்பட்டு தொடர்ந்து பேணிப் பாதுகாக்கப்பட்டுவரும் இடங்களில் வல்வை நெடியகாடு பிள்ளையார் கோயில் பகுதி முன்னணியில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
கீழே படங்களில் மரங்கள் எவ்வாறு அகழ்ந்து எடுக்கப்பட்டு உரிய இடத்திற்கு கொண்டு வரப்படுகின்ற காட்சிகளைக் காணலாம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
Valvaimani (swiss)
Posted Date: September 21, 2017 at 02:23
நெடியகாடு இளைஞர்களின் இந்த முயற்சிக்கு தலைவணங்குகிறேன் இவர்களைப் போல் ஊரில் உள்ள இளைஞர்கள் மற்றும் கொண்டு நிறுவனங்கள் இணைந்து தத்தமது பகுதியில் இப்படி மரம் நடுகையில் ஈடுபட்டால் நம்மூர் ஒரு சில வருடங்களில் செழிப்பான ஊராக மாறிவிடும் .ஊரில் கழக விழாக்களுக்கு செலவழிக்கும் பணத்தில் ஒரு வீதம் தன்னும் ஒதுக்கி தத்தமது பகுதியில் மரம் நடுகையில் ஈடுபடுங்கள் என்று உங்களை வேண்டி நிற்கிறேன்.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.