விளையாட்டுத் துறையில் மாணவர்கள் காட்டும் ஈடுபாடுகளுக்கு பாடசாலை தவணைப் பரீட்சைகளின் போது போனஸ் புள்ளிகள் வழங்குமாறு கொழும்பு கல்வி அமைச்சு பாடசாலை அதிபர்களுக்கு அனுப்பி வைத்துள்ள சுற்று நிரூபத்தில் தெரிவித்துள்ளது.
பாடசாலை மாணவர்களை ஆகக்குறைந்தது ஒரு விளையாட்டிலாவது பங்குபெற்று செய்வதற்குரிய முன்னேடுப்பாகவே இந்தத் திட்டம் முன்னேடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது . இன்றைய நிலையில் மாணவர்கள் இணைப்பாடவிதானச் செயற்பாடுகளில் ஈடுபடுவது குறைந்து வருகின்றது . இதனால் மனரீதியாக அழுத்தங்கள் ஏற்படுகின்றன விளையாட்டுக்களில் ஈடுபடுவதன்
மூலம் மாணவர்களுக்கு மனரீதியாக பலம் அதிகாரிக்கும். அத்துடன் அளுமை சமூக பொறுப்புக்களில் கூட்டு முயற்சிகளில் அதிகம் ஈடுபடுவர்கள் எனவே உள்ளக மற்றும் வெளிக்கள விளையாட்டுக்களில் ஈடுபடும் மாணவர்களுக்கு விளையாட்டு திறமை அடிப்படையிலேயை புள்ளியிடல் மேற்கொள்ளப்படவேண்டும்.
மாணவர்கள் ஒவ்வொருவரும் தலமைத்துவப்பண்பு ஒருங்கிணைந்து செயற்படல் தற்துணிவு போன்ற தகமைகளை பெறவேண்டும் என்பதே போனஸ் புள்ளிகள் வழங்கும் திட்டத்தின் நோக்கம் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது இந்திட்டம் தேசிய பாடசாலைகள் மாகாண ப் பாடசாலைகளில் நடைமுறைப்படுத்தப்படும்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.