யாழ் மாவட்ட லீக்கினால் பிரதேச செயலங்களில் பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கிடையிலான கடற்கரை கரப்பந்தாட்டம் (Beach Volley ball) மற்றும் கபடி போட்டிகள் தற்பொழுது வல்வெட்டித்துறை ரேவடி மற்றும் உதயசூரியன் கடற்கரை மைதானங்களில் ஒரே நேரத்தில் இடம்பெற்றுவருகின்றன.
கபடிப் போட்டிகள் ரேவடிக் கடற்கரை மைதானத்திலும், கடற்கரை கரப்பந்தாட்ட போட்டிகள் உதயசூரியன் கடற்கரை மைதானத்திலும் இடம்பெறுகின்றன. கடற்கரை கரப்பந்தாட்ட போட்டிக்கு மொத்தம் 8 அணிகளும், கபடி போட்டிக்கு 6 அணிகளும் யாழில் இருந்து கலந்து கொள்கின்றன. இவற்றில் பெண்கள் அணியும் கலந்து கொள்வது குறிப்பிடத்தக்கது.
இதுவரை நடந்த போட்டிகளில் பருத்தித்துறை பிரேதேச செயலக அணி, யாழ் அணியுடன் மோதி தோல்வி கண்டுள்ளது. பருத்தித்துறை பிரதேச அணி சார்பாக வல்வை அணியிலிருந்து செல்வன் தர்சன் மற்றும் சீலன் ஆகியோர் கலந்து கொண்டனர். போட்டிகள் தொடந்து நடைபெறுவருகின்றது
யாழில் இவ்வாறாக 2 கடற்கரை மைதானங்களில் இரு வேறு உத்தியோகபூர்வ போட்டிகள் நடைபெறுவது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.