யாழ் லீக்கின் கடற்கரை கரப்பந்து, கபடி போட்டி ரேவடி, உதயசூரியன் கடற்கரையில் ஒரே நேரத்தில்
பிரசுரிக்கபட்ட திகதி: 14/05/2016 (சனிக்கிழமை)
யாழ் மாவட்ட லீக்கினால் பிரதேச செயலங்களில் பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கிடையிலான கடற்கரை கரப்பந்தாட்டம் (Beach Volley ball) மற்றும் கபடி போட்டிகள் நாளை 15 ஆம் திகதி வல்வெட்டித்துறை ரேவடி மற்றும் உதயசூரியன் கடற்கரை மைதானங்களில் ஒரே நேரத்தில் இடம்பெறவுள்ளன.
கபடிப் போட்டிகள் ரேவடிக் கடற்கரை மைதானத்திலும், கடற்கரை கரப்பந்தாட்ட போட்டிகள் உதயசூரியன் கடற்கரை மைதானத்திலும் இடம்பெறவுள்ளன.
யாழில் இவ்வாறாக 2 கடற்கரை மைதானங்களில் இரு வேறு உத்தியோகபூர்வ போட்டிகள் நடைபெறவுள்ளமை இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது..............................
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.