தீருவில் தூபி விவகாரம் - பொலிசாரால் நீதிமன்றில் பெறப்பட்ட தடையுத்தரவு
பிரசுரிக்கபட்ட திகதி: 05/10/2018 (வெள்ளிக்கிழமை)
கடந்த 05.10.1987 அன்று பலாலியில் சயனைட் அருந்தி மரணமடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்களான குமரப்பா மற்றும் புலேந்திரன் உட்பட்ட பன்னிருவர் ஞாபகார்த்த தூபி அமைந்திருந்த வல்வெட்டித்துறை தீருவில் வெளியில், பன்னிருவர் ஞாபகார்த்த தூபிக்கான அடிக்கல் நாட்ட முயற்சி எடுக்கப்பட்டது.
பொது மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அதேவேளை இந்த முயற்சிக்கு எதிராக வல்வெட்டித்துறை போலீசார் நீதிமன்றில் தடை உத்தரவு (Stay order) பெற்றுக் கொண்டு வந்து, அடிக்கல் நாட்டுவதி நிறுத்தும் படி கேட்டனர்.
தொடர்ந்து சில நிமிடங்கள் ஏற்பட்ட அமளி துமளியை அடுத்து அடிக்கல் நாட்டும் முயற்சி கைவிடப்பட்டது.
நிகழ்வின் போது ஏராளாமான போலீசார் சம்பவ இடத்தில் நின்றிருந்தனர்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.