வல்வை நகரசபையின் புதிய உப தவிசாளராக அருமைரத்தினம் சதீஸ்வரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். நேற்றய தினம் முற்பகல் 10 மணியளவில் உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் நிரஞ்சன் தலமையில் தெரிவு இடம்பெற்றது.
உபதவிசாளர் தெரிவில் கூட்டமைப்பிலிருந்து 5 உறுப்பினர்களும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியிலிருந்து ஒரு உறுப்பினரும் சுஜேட்சைக் குழு உறுப்பினர்கள் மூவருமாக மொத்தம் ஒன்பது உறுப்பினர்கள் தமது ஆதரவை வழங்கியிருந்தனர்.
கொரோனோ தொற்றுக்கு ஆளாகி மரணமான வல்வை நகரசபைத் தலைவர் திருகருணாநந்தராசா அவர்களின் வெற்றிடத்துக்கு பதிலாக, திரு.சதீஷ் கடந்த செப்டெம்பர் மாதம் வல்வை நகரசபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.