வல்வெட்டித்துறை வாலாம்பிகா சமேத வைத்தீஸ்வரர் ஆலயத்தில் ஆனித்திருமஞ்சனம் உற்சவம் இன்று மிகவும் சிறப்பாக நடைபெற்றிருந்தது. ஆனி உத்தரத்திற்கான அபிஷேகம் இன்று அதிகாலை 06.00 மணியளவில் ஆரம்பமாகி, பின்னர் சுமார் 07.00 மணியளவில் வசந்தமண்டபத்திற்கான பூசையைத் தொடர்ந்து நடராஜப் பெருமான் வீதி உலாவும், நடராஜர் திருக்கூத்தும் சிறப்பாக நடைபெற்றது.
இலங்கையில் பல சிவன் கோவில்கள் இருந்த போதிலும், நடராஜர் திருக்கூத்து நடைபெறுவது ஒரு சில சிவன் கோவில்களில் மட்டுமே. அத்தகைய நடராஜர் திருக்கூத்து நடைபெறும் கோவில்களில், வல்வெட்டித்துறை சிவன் கோவிலும் ஒன்று என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
விசேடமாக அமைக்கப்பட்ட பொறிமுறையுடன் கூடிய சகடையில் (manually operated car), நடராஜப்பெருமான் வீதி உலாவும் திருக்கூத்தும் சிறப்பாக நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது.
ஆனித்திருமஞ்சனம்
ஆனி மாதம் தேவர்களின் சாயங்காலை பூஜை நேரமாகும். அதனால் ஆனி உத்தரதன்று நடராசருக்கு வைகறையில் அபிஷேகம் நடை பெறும். ஆனிமாத உத்தரநட்சத்திரத்தில் நடைபெறும் அபிஷேகத்தை ”ஆனித்திருமஞ்சனம்” என்று அழைப்பர்.
ஆதியும் ,அந்தமும் இல்லாத சிவபெருமான் ஆன்மாக்களுக்கு உதவும் பொருட்டுப் பல வடிவங்களை எடுத்துள்ளார். இவற்றுள் நடராஜ வடிவம் முக்கியமானது.சிவபெருமான் நடராஜ வடிவத்தில்காட்சி அளிக்கும் போது கொண்டாடப்படுவதே ஆனி உத்தரப் பெருவிழாவாகும்.
ஆனி உத்தரம் தமிழ் மாதங்களின் மூன்றாவது மாதமான ஆனி மாதத்தில் வருகின்றது. பகல் முழுவதிலும் நடராஜருக்கு அபிடேக ஆராதனைகள் இடம்பெறுவதுடன், இரவு முழுவதும் புராண படன படிப்பும் ஆலயங்களில் இடம்பெறும்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.