வல்வையில் இருந்து அமெரிக்கா சென்று வரலாற்றுச் சாதனை மேற்கொண்டிருந்த அன்னபூரணி கப்பலுக்கு (Flourence C Robinson) எனச் செய்யப்பட்டிருந்த நங்கூரம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்ட்டுள்ளது. வல்வையைச் சேர்த்த தற்பொழுது லண்டனில் வசிக்கும் திரு.மகேந்திரகுமார் (மாச்சா) என்வரின் முயற்சியியால் குறித்த நங்கூரம் வடமராட்சிப் பகுதியில் – நங்கூரம் செய்யப் பட்டிருந்த இடத்திலேயே கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
தயாரிப்பின் பின்னர் நங்கூரத்தில் ஏற்பட்ட சமநிலை குழப்பம் (Imbalance),, மற்றும் பாரம் காரணமாக நங்கூரம் கைவிடப்பட்டுள்ளது.
குறித்த நங்கூரத்தை வல்வைக்கு கொண்டு வந்து அதனை நிரந்தரமாக காட்சிப் படுத்த திரு.மகேந்திர குமார் முயற்சித்து வருகின்றார்.
குறித்த நங்கூரம் அன்னபூரணி கப்பலுக்கு செய்யப் பட்டதாகச் சொல்லப்பட்டதை மிகத் தகுந்த ஆதாரங்களுடன் உறுதிப் படுத்த முடியாவிட்டாலும், நங்கூரம் ஆனது வல்வையில் பாவனையில் இருந்த கப்பல் ஒன்றுக்குத்தான் செய்யப்பட்டுள்ளது உறுதிதிப்படுத்தப்பட்டுள்ளது .
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.