சமூகம் சார்ந்த பிரச்சினைகளை களமாக எடுத்து தனக்கு உரிய பாணியில் திரை மொழியில் கொண்டு வருவதில் J.வினோத் முதன்மையானவர் அதற்கு அவர் முன்னைய படங்கள் எடுத்துக்காட்டு .அந்த வகையில் இம்முறையும் யாசகம் என்ற படம் ஊடாக மீண்டும் நிலைநாட்டி உள்ளார்.
காணாமல் போன பிள்ளையை தேடி அலையும் ஓர் அன்னையின் வலி வேதனையை கதையின் களமாக கொண்டு இறுதி நிமிடம் வரை நம்மை படத்தோடு ஒன்றி பயணிக்க வைப்பதில் இயக்குனராக வெற்றி பெறுகிறார்.
இரண்டே இரண்டு முக்கிய பாத்திரங்கள் அதிலும் அன்னையாக வரும் மகேஷ்வரி அம்மா உண்மையில் ஓர் பிள்ளையை தொலைத்த தாயின் பிரதிபலிப்பாக நடிப்பில் மிளிர்ந்து கண்களில் ஈரமாக்குகிறார்.
அடுத்து மதி சுதா வழக்கம் போல தன்னுடைய யதார்த்தமான நடிப்பு ஊடாக நம்மை ரசிக்க வைக்குவகிறார்.அடுத்து சுதர்சனின் இசை மிகப் பெரிய பலம்.
எங்கு தேவையோ அங்கு நமக்கும் அதே உணர்வை கடத்துகிறார் .அடுத்து துசிகரனின் நேர்த்தியான ஒளிப்பதிவு ,ஒளித்தொகுப்பு பாராட்டபட வேண்டியவை .இருப்பினும் ஒளித்தொகுப்பில் இன்னும் இரண்டு நிமிடங்களை குறைத்து இருக்கலாம் என எண்ண தோன்றுகிறது.
ஏற்கனவே இந்த படம் பல விருதுகளை பெற்று வெளிவந்துள்ளது .மொத்தத்தில் யாசகம் காலத்தின் கண்ணாடியாய் நின்று வெற்றி பெறுகிறது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.