Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

அமரர் வயித்திலிங்கம்பிள்ளை வேலும்மயிலும் பற்றி - ந.சிவரட்ணம்

பிரசுரிக்கபட்ட திகதி: 11/04/2018 (புதன்கிழமை)

20.03.2018ல் சிவபதமடைந்த வல்வெட்டித்துறை பிரபல்யங்களில் ஒருவரான அமரர் வயித்திலிங்கம்பிள்ளை வேலும்மயிலும் ஜயா அவர்களின் 31ம் நாள் நினைவலையை முன்னிட்டு மீள்பதிவு செய்யப்படுகிறது. – April-2018

திரு.வேலும்மயிலும் ஜயாவுடனான முதல் சந்திப்பு
 
ஆதிகோவிலடியைப் பிறப்பிடமாகக் கொண்ட நான்(1964/65) G.C.E O/L படித்துக் கொண்டிருக்கும் பொழுது எனது தாயார் திருமதி நடராஜா வள்ளியம்மாள் எமது ஊருக்குரிய கிராம சேவகர் ஒருவரிடம் கடிதம் ஒன்று பெற்று அதை பருத்தித்துறை உதவி அரச அதிபர் பணிமனையில் சமர்ப்பிக்க வேண்டி இருந்ததால் குறித்த கிராம சேவகரிடம் சென்று அக்காரியம் நடைபெறாமையால் அதுபற்றிய கவலையுடன் என்னிடம் கூறி AGA வேலும்மயிலும் ஜயாவை சந்தித்து உரிய கடிதத்தை பெற்றுத் தருமாறு என்னை வேண்டிக் கொண்டார். அதற்கமைய அவர் வசித்த வல்வை ஊறணி ஆஸ்பத்திரிக்கு பின்னால் அமைந்துள்ள அவரது வீட்டிற்கு காலை 7 மணி போல சென்றேன். (அக்காலப் பகுதியில் அவர் எங்கே என்ன பதவியை வகித்தார் என்பதை நான் அறிந்திருக்கவில்லை.)

அப்பொழுது அவர் பல்துலக்கிய வண்ணம் நின்று கொண்டிருந்தார். என்னைக் கண்டதும் இன்முகத்துடன் வரவேற்று எமது பிரச்சினைகளை தெரிந்து கொண்டார். நான் விடயத்தைக் கூறியதும் என்னை அமரும்படி கூறி உள்ளே சென்றுவிட்டார். நானோ பாடசாலைக்கு செல்வதற்கு நேரம் போய்க்கொண்டிருந்தமையால் பதற்றப்பட்டுக் கொண்டிருந்தேன். என்னே ஆச்சரியம்! போன ஜயா அவர்கள் அதே கதியில்  கையில் ஒரு பெட்டியுடன் ((Type Writer) திரும்பி வந்து அப்பெட்டியைத் திறந்து ஏதோ அச்சுப்பதிவு செய்தார். அத்துடன் தனது அருகிலிருந்த காரியாலயத்திற்கு கொண்டு செல்லும் Office bag (பை) ஜ திறந்து  ஒரு Rubber Stampயும் எடுத்து அதில் பதித்து தனது ஒப்பத்தையும் இட்டு அக்கடிதத்தை என்னிடம் தந்து எனதுதாயாரிடம்  ஒப்படைக்கும்படியும் மீண்டும் குறித்த கிராம சேவகரிடம் போக வேண்டிய அவசியமில்லை எனவும் குறித்த கடிதத்தை பருத்தித்துறை உதவி அரச அதிபர் காரியாலயத்தில் சமர்ப்பிக்கும்படி கூறி என்னையும் நன்றாகப் படிக்க வேண்டும் உன்னைப் பெற்றவர்களுக்கும், ஆதிகோவிலடிக்கும் பெருமை தேடித்தரவேண்டும் என வாழ்த்தி அனுப்பினார்.    

இவையாவும் 10 நிமிடத்திற்குள் நடந்து முடிந்த சம்பவங்கள் ஆகும். இது என் வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்வாக என் மனதில் ஆழப்பதிந்து திரு.வேலும்மயிலும் ஜயாவைப் போல நானும் பொதுமக்களுக்கு உதவிபுரிய வேண்டும் எனும் திடசங்கற்பத்தை எனக்குள் உருவாக்கியது. வீடு சென்று அம்மாவிடம் கடிதத்தை கொடுத்து நடந்தவற்றையும் கூறினேன். அம்மாவும் அந்த மகானைப் போல எதிர்காலத்தில் நீயும் உருவாகி பொதுமக்களுக்கு முடிந்த உதவிகளைச் செய்ய வேண்டும் என்று தனது ஆசியுடன் கூறி வைத்தார். அன்றைய தினத்திலிருந்து எனது RoleModel ஆக   வேலும்மயிலும் ஜயாவை மனதிலிருத்தி இன்றுவரை எனது சேவைகளை பொதுமக்களுக்கு ஆற்றி வருவதற்கு காரணம் இந்தப் பெரியார் திரு.வேலும்மயிலும் ஜயா அவர்களே.

கேள்வி:-  திரு.வேலும்மயிலும் ஐயா அவர்களே உங்களைப்பற்றிய சில தகவல்களை வல்வை மக்களுக்கு தெரியப்படுத்தவேண்டிய கடப்பாடு எனக்கிருப்பதால் தயவு செய்து முதலில் உங்கள் தோற்றம் பற்றியும் தாய் தந்தையர் மற்றும் குடும்பத்தினர் பற்றியும் கூற முடியுமா?

பதில்:     சந்தோசம்,  என்னையும் அண்ணா R.Sஐயும் 11.11.2012இல் கௌரவித்த பொது மக்களுக்கு முதலில் எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். அக்கௌரவத்திற்கு நான் தகுதியுடையவனோ தெரியாது. இருந்தும் என்னை அழைத்தவர்களை கௌரவிக்கவேண்டும் எனும் பண்பிற்கமையவே நான் யாழ் நகரிலிருந்து எனது பாரியாருடன் அங்கு வருகை தந்தேன். இது எமக்கு சுமத்தப்பட்ட அன்புக்கடமை என்றே கருதுகிறோம்.

ஆம் எனது தந்தையின் பெயர் செல்லச்சாமி வைத்திலிங்கம்பிள்ளை, தாயார் சின்னத்தம்பி மகள் தெய்வநாயகி அம்மா. நாங்கள் ஏழு பிள்ளைகள். ஒரு சகோதரர் சோமசேகரம்;(Auditor -Exmination Department)இல் கணக்காய்வாளராகப் பணிபுரிந்தவர். ஒரு தம்பி பல்வைத்திய நிபுணர் Dr.திருவடிவேல், ஒரு அக்கா மகாலஷ்மி, ஏனைய மூன்று சகோதரர்கள் முறையே சந்திரசேகரம்;(France), இராயலஷ்மி மற்றும் ஞானாம்பிகை;(France)

கேள்வி:   உங்கள் தந்தையார் காலத்தில் அதாவது உலக மகாயுத்த காலத்திலே வாழ்ந்த எம்மவர் பற்றி அறிய ஆவலாக உள்ளது. அது பற்றி …….?

பதில்:  எனது தந்தையாரின் கல்வித்தகமை English School Leaving Certificate(ES.L.C)  ஆங்கிலப் பாடசாலையில் கல்விகற்றுத் தேறியமைக்கான சான்றிதழ். அப்போ கல்வி முழுக்க ஆங்கில மொழியிலேயே (English medium)  நடாத்தப்பட்டன. இவரது தராதரம் தற்போதைய G.C.E A/L க்குச் சமமானது எனக் கூறலாம். அக்காலத்தில் இது பெரிய படிப்பு இத்தகுதியுடன் இவர் மலேசியா சென்று Malasiyan RailwayDepartment இல் Station Master ஆக அதாவது புகையிரத நிலைய பொறுப்பதிகாரியாக கடமைபுரிந்தார். உலக மகா யுத்தத்தில் இலங்கைக்கு வந்துபோக எண்ணிய இவர் மீண்டும் அங்கு செல்லவில்லை. இதனால் இவர் ஒரு மலாய பென்சனராக இருந்தார். மலேசியாவுக்கு மீண்டும் போகமுடியாமையால் வல்வெட்டித்துறை நகரசபையில் வருமானவரி ஆலோசகராக (Income Tax Advisor and Revenue officer) கடமைபுரிந்து எங்களை எல்லாம் அம்மாவுடன் சேர்ந்து வளர்த்து ஆளாக்கினார்.

கேள்வி:   உங்களுடைய பிறந்த திகதியைக் கூறமுடியுமா?

பதில்:     ஆம். அது 24.08.1936

கேள்வி:   நீங்கள் கல்வி கற்ற பாடசாலைகள்?

பதில்:    ஆரம்பக்கல்வி வல்வெட்டித்துறை அமெரிக்கன் மி~ன் பாடசாலை பின்னர் A/L வரை சிதம்பரக் கல்லூரி

கேள்வி:    நீங்கள் எத்தனை வயதில் அரச உத்தியோகத்தில் சேர்ந்தீர்கள். அதன் படிமுறை வளர்ச்சி எப்படி இருந்தது. அதாவது உங்களின் Career Development  பற்றி அறிய ஆவலாக உள்ளேன்.

பதில்:   எனது ஞாபகப்படி பின்வருவனவற்றை என்னால் கூற முடியும். நான் எனது 19வது வயதில் வேலையில் இணைந்தேன்.

திகதி                                                                  சேவையும் தகுதியும்

Date                                                                     Title of Jobs and Service record

25/07/1955      Government Clerical Service    - அரச லிகிதர் சேவை

01/10/1959   Passed class II exam in 1st shy   - அரசசேவை தரம்ஐஐபரிட்சையில் ஒரே முறையில் சித்தி

01/06/1976 Passed S.L.A.S Exam                   -  சித்தி-இலங்கை நிர்வாக சேவைப் பட்டப்படிப்பு   (Srilanka Administrative Service)

01/06/1986  Passed Class I exam 1st shy        -   அரசசேவை தரம்ஐபரிட்சையில் ஒரே முறையில் சித்தி

24/08/1996  Retiring Date – (but not allowed to )  - 60வது வயதில் ஓய்வுநிலை ஆனால் அனுமதி

கிடைக்காமையால் மேலும் 61/2  வருடங்கள்  சேவையில் நீடிப்பு

கேள்வி:  எப்படி நீங்கள் இவற்றையெல்லாம் திகதி வாரியாக ஞாபகம் வைத்துள்ளீர்கள்?

பதில்: இக்காலத்தைப்போல அப்போ கணனி யுகம் இல்லையே. எல்லாமே அடிமனதில் பதிந்து விடுகின்றன. அதாவது கணனி மொழியில் கூறுவதானால் Hard Disk இல் பதியப்பட்டுள்ளன என நினைக்கிறேன்.

கேள்வி:   அக்காலத்தில் வாய்பாடு மனனம் செய்வது என்பது இப்போது கல்குலேட்டரால்(;(Calculator)  ஈடு செய்யப்பட்டுள்ள பரிதாப நிலைபோலுள்ளது என்பதை சாகசமாக சொல்கிறீர்கள் போலும்.

உங்கள் ஆளமை விருத்தியை தொழில்சார் கல்வி உயர் தகமைகள் மூலம் நிரூபித்து மற்றவர்களுக்கு முன்மாதிரியாகவும் வழிகாட்டியாகவும் திகழ்ந்துள்ளீர்கள். அதாவது A.L தகுதியுடன் சாதாரண லிகிதர் வேலையில் சேர்ந்து ClassII, ClassI மற்றும் S.L.A.S தொழில்சார்; கல்விகளில் சித்தியெய்தி அரச அதிபர் வரையான பல பதவிகளை வகித்திருக்கிறீர்கள்.

இப்பதவிகள் எவ்வாறானவை அவைமூலம் சமூகத்திற்கு எவ்வாறு உதவியுள்ளீர்கள் என்பது பற்றி அறிய ஆர்வமாக உள்ளோம். எனவே தங்கள் சேவைக்காலம்இ வேலை செய்த இடங்கள், வகித்த பதவிகள் என்பன பற்றி எமது மக்களுக்கு அறியத்தர இயலுமா?

பதில்: முதல் 06 வருடங்களும் நீதிவான் நிதிமன்றத்தில் (Magistrate Court)  லிகிதர் தரம்;III இலும், தரம்;II இலும் கடமை புரிந்தேன், பின்னர் 1961 ம் ஆண்டிலிருந்து 1966வரையான 06 வருடங்கள் இரத்தினபுரி மாவட்ட நிதிமன்றில் (District Courts) வேலை செய்தேன்.இக்காலப்பகுதியில் தட்டச்சாளராகவும் லிகிதராகவும் பணி புரிந்தேன். இக்காலப்பகுதியில்தான் ClassII Exam இல் சித்தியடைந்தேன்.

1967 -1970 வரையான 03 வருடங்களில் பருத்தித்தறை நீதவான் நீதிமன்றில் (Magistrate Court)ல் தொலுக்குமதலி அதாவது கோட்முதலியார் எனச் சொல்லலாம் ((Interpritor--மொழிபெயர்ப்பாளர்) எனும் பதவியிலிருந்தேன். அக்காலத்தில் வழக்குகளெல்லாம் ஆங்கில மொழியிலேயே நடாத்தப்பட்டன.

1970-1976 வரை நம்பிக்கைப்பொறுப்பாளர் திணைக்களத்தில் (Public Trustees Department)ல் கடமையாற்றினேன்.

1976ல் S.L.A.S Exam இல் சித்தியடைந்தமையால் உதவி அரச அதிபராக (A.G.A) இரண்டு வருடங்கள் அதாவது 1978 வரை கரவெட்டிப் பிரதேசப் பகுதியில் வேலை செய்தேன்.

1978 – 1990 வரையான 12 வருட நீண்டகாலப் பகுதியில் பருத்தித்துறை உதவி அரச அதிபராக கடமையாற்றினேன். இக்காலப்பகுதி தமிழ் மக்களின் போராட்ட ஆரம்பகாலத்தையும் நடுப்பகுதியையும் உள்ளடக்கிய காலமாகவும் 1987ல் ஒப்பரேசன் லிபரேசன் நடவடிக்கையின் காலமாகவும் இருந்தது. இக்காலப்பகுதியில் சட்டவரம்புக்குட்பட்ட வரையிலும் தற்துணிவிலும் எமது மக்களுக்கு என்னாலான உதவிகளை அதாவது உணவு,இடப்பெயர்வு,புலம்பெயர்வுகளுக்கான  ஆவணங்களை உறுதிப்படுத்தல் போன்ற உதவிகளைச் செய்ய முடிந்தது.

Oct 1990லிருந்து 01.06 1993 வரையான 21/2 வருடகாலமாக  வடக்கு கிழக்கு மாகாண ஆளுனரின் செயலாளராக(Secretary of the Commessioner –North, East)பணிபுரிந்தேன். இதைத் தொடர்ந்து March 93இலிருந்துதுJan2002 வரையான ஏறக்குறைய ஒன்பது வருடகாலமாக இரு பதவிகளைக் கொண்ட மிகவும் பொறுப்பாக சேவையாற்றவேண்டியேற்பட்டது. இக்காலப்பகுதியின் பெரும்பகுதி வடக்கும் தெற்கும் துண்டிக்கப்பட்டு போக்குவரத்து,உணவு,அத்தியாவசிய மருந்துப்பொருட்கள், போன்றவற்றில் எமது மக்கள் பெரும் துன்பத்தை அனுபவித்த காலமாக இருந்தமையை நான் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அந்த இரு பொறுப்புக்களாவன

பிரதேச செயலர் (Divisional Secretary)  - திருகோணமலைப் பட்டினமும் சூழலும்.

அத்தியாவசிய சேவைகள் (Duputy Commissioner –Eassential Service)    - பிரதி ஆணையாளர்

இதனைத்தொடர்ந்து April 2002 லிருந்து எனது சேவையை நோர்வே நாட்டை பின்புலமாக கொண்ட Srilanka Monitoring Mission (S.L.M.M)  என்னும் இலங்கை போர்நிறுத்தக்  கண்காணிப்புக்குழு பெற்றுக்கொண்டது. இதில் நான் ஒரு ஆலோசகராகவும் உறுப்பினராகவும் 2009  வரை கடமையாற்றினேன். இதன் பின் இக்குழவின் பணி நீடிக்கப்படவில்லை. எனது சேவையை மதித்து கௌரவிக்கும் பொருட்டு நோர்வே அரசாங்கம் எமது குடும்பத்தினருக்கு நோர்வே குடியுரிமை தந்து அங்கு வரவழைக்க வேண்டுகோள் விடுத்தது. நான் கௌரவத்துடன் அதை ஏற்க மறுத்துவிட்டேன்.

நன்றி வேலும் மயிலும் ஐயா அவர்களே. நீண்டதொரு பாதைக்கு இட்டுச்சென்றுள்ளீர்கள். எமது சிறிய வல்வெட்டித்துறையில் ஆரம்பித்த உங்கள் வாழ்வில் எத்தனையோ சேவைகளை மிகவும் இக்கட்டான காலகட்டத்தில் ஜாதி,மதம்,இனம் பாராது ஆற்றி முடிந்தளவுக்கு எல்லோருக்கும் உதவியுள்ளீர்கள். நிச்சயமாக உங்கள் பதவிகளை நீங்கள் சிறந்த பண்பாளராக பொது மக்களினதும் அல்லல்படுபவர்களினதும் போரினால் பாதிக்கப்பட்டவர்களினதும் நன்மைக்கே பயன்படுத்தியுள்ளீர்கள் என்பது பல தரப்பட்ட மக்களிடமிருந்தும் நாம் அறியக்கூடியதாக உள்ளது.

“பதவி வரும் போது பணிவும் வர வேண்டும்” என்பது நான் M.G.R இன் சினிமாப்படத்தில் கேட்ட வரிகள்  அந்தப் பண்பை உங்களிடம் பலர் கண்டுள்ளார்கள்.தனிப்பட்ட முறையில் அந்த அனுபவத்தை எனது பள்ளிப் பருவத்தில் நானும் உங்களிடம் கண்டுள்ளேன். உங்களின் சேவையை வல்வெட்டித்துறை மக்களாகிய நாம் மட்டுமல்ல பருத்தித்துறைப் பிரதேசம்,திருமலைப் பிரதேசம்  என்பன மட்டுமல்லாமல் முழு இலங்கையுமே பெற்றிருக்கிறது. அது மட்டுமா! கடல்கடந்து உங்களின் திறமை,ஆளுமை, உயரிய பண்புகள் என்பன பரவியுள்ளதற்கு எடுத்துக்காட்டுத்தான் நோர்வே அரசாங்கம் உங்களை இனங்கண்டு தனது அமைப்பில் தங்களை உள்வாங்கியமை.

உங்களுக்கு 24 மணிநேரமும் கந்தோர் நேரம்தான். வீடு,வீதி,பயணம் செய்யும் வாகனம் எல்லாமே உங்களுக்கு காரியாலயம்தான். எப்பொழுதுமே தங்களது கந்தோர் பையிலே உங்கள் பதவி இலச்சனையை (Official Rubber Stamp) கொண்டு செல்வது உங்கள் வழக்கமாக இருந்தது என பலர் சொல்ல நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.

கேள்வி:   நீங்கள் எங்களுக்கு அதாவது தற்போது பதவிகளில் இருப்பவர்களுக்கும் மாணவ சமுதாயத்திற்கும் பொது மக்களுக்கும் சொல்ல விரும்பும் செய்தியை சுருங்கக் கூறுங்கள்.

பதில்  : எனது குணவியல்பு எப்படி என நான் கூற முடியாது. அது மற்றவர்களின் கணிப்புக்குரியது. ஊர் மக்கள் என்னையும் இப்பெருமெடுப்பில் கொரவிக்குமளவிற்கு  நான் ஏதாவது செய்திருந்தால் அது நானும் என்னை ஈன்றவர்களும் செய்த பாக்கியமே.

இருந்தும் நான் என் வாழ்நாளில் கடைப்பிடித்த,பிடித்து வருகின்ற சில பண்புகளை இங்கே கூற விரும்புகிறேன். அதை ஏனையவர்களிடமும் எதிர்பார்க்கிறேன்.

எப்பதவி வகித்தாலும் மிக எளிமையாக இருத்தல்.

மக்களால் இலகுவாக அணுகப்படக்கூடியவராக இருத்தல்.

எந்த நேரத்திலும்;, எங்கும் நேரம் காலம் பாராது “மக்கள் சேவையே மகேசன் சேவை” என எண்ணி பொதுமக்களுக்கு உதவிசெய்யும் மனப் பக்குவத்துடன் பணிபுரிதல்.

அன்றே அந்த நேரத்திலேயே செய்து முடிக்கக்கூடிய காரியங்களை உடனுக்குடன் காலத்தை பிற்போடாமல் முடித்துவிடும் கொள்கையுடன் சேவை செய்தல்.

எக்காரணம் கொண்டும்  ஒரு பொதுமகனை தேவையின்றி மீண்டும் காரியாலயத்திற்கு அழைக்காதிருத்தல்.

தேவையற்ற ஆவணங்களை கோராமலிருத்தல்.

அதிகாரிகள் முடிந்தளவில் தாங்களே முடிவெடுத்து தமது அதிகார வரம்புக்குட்பட்ட வேலைகளை செய்தல்.

கேள்வி: உங்களின் வெற்றியின் இரகசியம் என்னவென்பதையும்  எப்படி நீங்கள் மக்களின் மனங்களில் இடம்பிடித்துள்ளீர்கள் என்பதை நீங்கள் நெடியகாட்டில் ஊறணிக்குப் பின்னால் வசித்துவந்த வீட்டின் ஒழுங்கைக்கு மக்கள் AGA ஒழுங்கை எனப்பெயர் வைத்ததிலிருந்து அறியமுடிகிறது. நீங்கள் வேறு என்ன கூறவிரும்புகிறீர்கள்.

பதில் : எனது இவ்வளவு காரியங்களையும் செய்து முடிக்கக்கூடிய ஆற்றலைத்தந்த கடவுளுக்கு அடுத்தபடியாக எனது மனைவியையே நான் முதன்மைப்படுத்துவேன். அவரின் பொறுமையும் நேரந்தவறாமையும் எனக்கு வேண்டிய சகல உதவிகளையும் இன்றும் செய்து வருகின்ற அவவின் அந்தப் பண்புதான் , அந்தப் பின்னணிதான் நான் வல்வை மக்களால் கௌரவிக்கப்படுவதற்கு மிக மிக முக்கிய காரணம். எனவே எல்லாப் புகழும் இறைவனுக்கே சேரட்டும்.

கேள்வி: இறுதியாக என்ன கூறவிரும்புகிறீர்கள்?

            இந்த வல்வை மண்ணில் எமது முன்னோடிகள் எமது மக்களுக்காக எவ்வளவோ தியாகம் செய்துள்ளனர். அவர்களை நாம் இனங்காணத் தவறியிருக்கலாம். எமது போராட்ட வரலாற்றில் எத்தனையோ பெற்றார் தமது பிள்ளைகளை இழந்துள்ளனர். நாடு கடந்து வாழும் வல்வெட்டித்துறை மக்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் இந்த மண்ணிற்காக எவ்வளவோ தியாகங்களை செய்து வருகின்றனர். ஆழிக்குமரன் ஆனந்தன் போன்றவர்கள் எத்தனை கின்னஸ் சாதனைகள் படைத்துள்ளனர். இப்படியாக மதிக்கப்படவேண்டிய கௌரவிக்கப்படவேண்டியவர்கள் பலர் இருக்கும்போது என்னையும் R.S அண்ணனையும் இப்போ கௌரவித்தமைக்காக நன்றிக்கடன் தெரிவித்துக்கொள்வதுடன் வல்வை மக்கள் தமது வரலாற்றுக்கடமைகளை மறக்காது வளம் மிக்க சமூதாயமாக வாழ வாழ்த்துகிறேன்.               

ஆக்கம்-

ந.சிவரட்ணம் (வல்வை ஆதிகோவிலடி ஜெயம்)

ஓய்வுநிலை உதவிப் பொது முகாமையாளர்-இலங்கை வங்கி


 

Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.

உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள்
(Comment here in Tamil or English)
Name:   Email:   Country:
Enter the same number in the box below
Verification Code: 

எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.


பிந்திய 25 செய்திகள்:
"ஈழத்தின் மாமன்னன் பல்லவராயன்" சிலை திறப்பு விழா
பிரசுரிக்கபட்ட திகதி: 05/06/2024 (புதன்கிழமை)
அறநெறிப் பாடசாலை கையளிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 03/06/2024 (திங்கட்கிழமை)
மரண அறிவித்தல் - பாலச்சந்திரன் பாரததேவி ( பாரதம் அக்கா)
பிரசுரிக்கபட்ட திகதி: 01/06/2024 (சனிக்கிழமை)
சற்குணராஜா நிமலன் அவர்களின் 15ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி
பிரசுரிக்கபட்ட திகதி: 30/05/2024 (வியாழக்கிழமை)
அமரர் திரு அம்பிகைபாகர் வேதவனம் - ஆறாம் ஆண்டு நினைவஞ்சலி
பிரசுரிக்கபட்ட திகதி: 28/05/2024 (செவ்வாய்க்கிழமை)
இன்றைய நாளில் – உள்நாட்டு யுத்தத்தின் முதலாவது இராணுவ நடவடிக்கை 'ஒபரேஷன் லிபரேஷன்'
பிரசுரிக்கபட்ட திகதி: 26/05/2024 (ஞாயிற்றுக்கிழமை)
ஊரணி வைத்தியசாலைக்கு குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம்
பிரசுரிக்கபட்ட திகதி: 25/05/2024 (சனிக்கிழமை)
புதிய மருத்துவ பீட வாளாகம் திறந்து வைப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 24/05/2024 (வெள்ளிக்கிழமை)
முன்னாள் நகரசபை செயலரின் மகள் விபத்தில் மரணம்
பிரசுரிக்கபட்ட திகதி: 24/05/2024 (வெள்ளிக்கிழமை)
வங்காள விரிகுடாவில் புயலுக்கு ரிமல் எனப் பெயர்
பிரசுரிக்கபட்ட திகதி: 23/05/2024 (வியாழக்கிழமை)
அந்தியேட்டி அழைப்பிதழ் - சிவசுப்பிரமணியம் பங்கைற்செல்வம்
பிரசுரிக்கபட்ட திகதி: 23/05/2024 (வியாழக்கிழமை)
வாங்காள விரிகுடாவில் தீவிர தாழமுக்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 21/05/2024 (செவ்வாய்க்கிழமை)
ஊரணி மயானம் சுத்திகரிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 19/05/2024 (ஞாயிற்றுக்கிழமை)
கடற்கரை சுத்திகரிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 19/05/2024 (ஞாயிற்றுக்கிழமை)
சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலாளர் முள்ளிவாய்க்காலில் அஞ்சலி
பிரசுரிக்கபட்ட திகதி: 18/05/2024 (சனிக்கிழமை)
15 ஆவது ஆண்டு முள்ளிவாய்க்காலில் நினைவேந்தல்
பிரசுரிக்கபட்ட திகதி: 18/05/2024 (சனிக்கிழமை)
A/L (2026) புதிய வகுப்புகள் ஆரம்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 18/05/2024 (சனிக்கிழமை)
கடலுக்குள் நடத்தப்பட்ட கையிறிழுத்தல் போட்டி
பிரசுரிக்கபட்ட திகதி: 17/05/2024 (வெள்ளிக்கிழமை)
விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு முதல்தடவையாக வீர வணக்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 16/05/2024 (வியாழக்கிழமை)
வங்காள விரிகுடாவில் தாழமுக்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 16/05/2024 (வியாழக்கிழமை)
ஆழமான கருத்தைக்கூறும் கார்ட்டூன்
பிரசுரிக்கபட்ட திகதி: 16/05/2024 (வியாழக்கிழமை)
முள்ளிவாய்க்கால் நினைவுகளைச் சுமந்து
பிரசுரிக்கபட்ட திகதி: 15/05/2024 (புதன்கிழமை)
மயிலியதனை இந்து மயானத்தில் சிரமதானம்
பிரசுரிக்கபட்ட திகதி: 13/05/2024 (திங்கட்கிழமை)
முள்ளிவாய்க்கால் 15 வது ஆண்டு நினைவேந்தல் வாரம் ஆரம்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 12/05/2024 (ஞாயிற்றுக்கிழமை)
VEDA மாசி மாத கணக்கறிக்கை
பிரசுரிக்கபட்ட திகதி: 12/05/2024 (ஞாயிற்றுக்கிழமை)

கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<Jun - 2024>>>
SunMonTueWedThuFriSat
      1
23
4
5678
9
10
11121314
15
161718
19
20
21
22
2324
25
26
272829
30      
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai