வல்வெட்டித்துறை கடற்பரப்பில் மாத்தறை மீனவர்களுக்கு சொந்தமான மீன்பிடி இழுவைப்படகு (ரோலர்) ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.
குறித்த சம்பவம் பற்றி தெரிய வருவதாவது,
இலங்கையின் தென் பகுதியான மாத்தறையில் இருந்து சில தினங்களுக்கு முன்னர் ஆழ்கடலில் மீன் பிடிப்பதற்காக கீழே படத்தில் காட்டப்பட்டுள்ள 5 மீனவர்களும் சென்றுள்ளனர். மீன் பிடித்துக் கொண்டிருக்கும் பொழுது, பருத்தித்துறைக்கு வட கிழக்கு திசையில் உள்ள வங்காள விரிகுடாவில் இவர்களின் ரோலரின் இயந்திரம் பழுதடைந்துள்ளது.
ரோலர் வேறு திசையில் அடைவதை (drifting) தடுப்பதற்காக குறித்த மீனவர்கள் நங்கூரம் பாய்ச்சி உள்ளனர்.
ஆனாலும் தற்பொழுது நீடித்து வரும் கடுமையான வட கீழ் பருவப் பெயர்ச்சி காலநிலை காரணமாக ஏற்பட்டுள்ள கடும் காற்று மற்றும் நீர் ஓட்டம் காரணமாக ரோலர் மெது மெதுவாக நகர்ந்து வல்வெட்டித்துறை கடற்பரப்பை (ஊரிக்காடு) அடைந்து, தாழ்வான கடற்பகுதியில் சரிந்து பகுதியாகத் தாண்டுள்ளது.
ரோலர் கரைக்கு கொண்டுவரும்போது அதனை பார்வையிட போலீசார், இராணுவத்தினர் மற்றும் பொது மக்கள் என ஏராளமானோர் குறித்த பகுதியில் குழுமியிருந்தனர்.
ரோலரில் இருந்த மீனவர்களை, அப்பகுதி மீனவர்கள் அழைத்து வந்து தங்கவைத்துள்ளனர்.
தொடர்ந்து காற்று பலமாக வீசி வருவதாலும், கடுமையாக அலைகள் எழுவதாலும் குறித்த ரோலரை திருத்தக் கூடிய ஏது நிலைமைகள் தற்பொழுது இல்லை எனக் கூறப்படுகின்றது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.