மலாக்கா நீரிணை ( Malacca strait) மற்றும் அந்தமான் தீவின் (Andaman Island) தெற்குப் பகுதியில் உள்ள காற்று சுழற்சி (Cyclonic circulation) மேற்கு - வடமேற்குத் திசையில் நகர்ந்து, அடுத்த 48 மணி நேரத்தில் வங்காள விரிகுடாவின் (Bay of Bengal) தென் கிழக்குப் பகுதியில் ஒரு தாழமுக்கமாகக் (Low Pressure) மாறக்கூடிய வாய்ப்புள்ளதாக இந்திய வளி மண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதனைத் தொடர்ந்து குறித்த தாழமுக்கம் அதற்கடுத்த 48 மணி நேர்த்தின் பின்னர் (3 ஆம் திகதி அளவில்) இலங்கை கிழக்கு கரையை நெருங்கக் கூடிய சாத்தியம் உள்ளது எனவும் இந்திய வளி மண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.