8 ஆவது தமிழ்நாடு கராத்தே போட்டி - 2 இலங்கை தமிழ் மாணவர் தங்கப்பதக்கங்கள் பெற்றனர்
பிரசுரிக்கபட்ட திகதி: 31/07/2017 (திங்கட்கிழமை)
நேற்று 30/07/2017அன்று சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள ஜே ஜே உள் விளையாட்டரங்கத்தில் 8 ஆவது தமிழ் நாடு கோபுக்கான் கராத்தே சம்பியன்சிப் போட்டி (8th Tamilnadu state Kufukan's Karate championship) இடம்பெற்றது.
இப்போட்டியில் தமிழகத்தில் உள்ள பலபகுதிகளில் இருந்து 500 க்கு மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் இராமநாதபுரத்தைச் சேர்ந்த 20 மாணவர்கள் கலந்து கொண்டு 10 மாணவர்கள் வெற்றி பெற்றனர்.
இவர்களில் இலங்கை வல்வெட்டித்துறையைச் சேர்ந்த கரத்தே மோகன்ராஜின் மகன் டினேஷ்கரன் 14வயது பிரிவில் கலந்து கொன்டு கட்டா மற்றும் குமித்தே ஆகிய இரு பிரிவிலும் முதலவது இடம் பிடித்து இரண்டு தங்கப்பதக்கங்களை பெற்றார்.
அத்துடன் திருகோணமலையை பூர்வீகமாகக் கொண்ட R.கம்சன் என்ற சிறுவனும் 11வயது பிரிவில் கலந்து கட்டாவில் முதலிடம் பெற்றுள்ளார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.