வல்வை ரேவடி கடற்கரைப் பகுதியில் அமைக்கப்படும் கின்னஸ் புகழ் வீரர் ஆழிக்குமரன் ஆனந்தன் ஞாபகார்த்த நீச்சல் தடாகத்திற்கு அரசு மொத்தம் 8 கோடி ரூபா ஒதுக்கியுள்ளதாக வட மாகாண சபை உறுப்பினர் திரு.எம்.கே.சிவாஜிலிங்கம் எம்மிடம் தெரிவித்தார்.
கடந்த சில தினங்கள் முன்பு தலைநகர் கொழும்பில் நிதி விவகார அமைச்சர் திரு.மங்கள சமரவீரவை சந்தித்தபொழுது குறித்த நிதி ஒதுக்கீடை திரு.மங்கள சமரவீர தன்னிடம் உறுதிப்படுத்தியதாக சிவாஜிலிங்கம் மேலும் தெரிவித்தார்.
ஆரம்பத்தில் ரூபா 2.5 கோடி ஒதுக்கப்பட்டு பின்னர் 5 கோடி ஒதுக்கப்பட்டு, தற்பொழுது மொத்தம் 8 கோடி புதிய நீச்சல் தடாகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
குறித்த நிதியில், மொத்தம் 3 கட்டங்களாக கட்டப்படவுள்ள நீச்சல் தடாகத்தின் முதல் 2 கட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.
முதல் 2 கட்டங்கள் பணிகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் கட்டி முடிக்கதிட்டமிடப்பட்டுள்ளது
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.