65 வயது பெண்மணி ஒருவர் சீனாவில் கம்பு நடனத்தில் (Pole dance) கலக்கி வருகின்றார். ஜியாங் சிஜுன் (Jiang Zhijun) என்னும் வயதான பெண்மணி, 2 வருடங்கள் முன்பு தனது மகள் கம்பு நடனத்தில் ஒரு பயிற்சியாளராக நியமக்கப் பட்டதிலிருந்து, கமபு நடனத்தில் தனது பயிற்சியை ஆரம்பித்திருந்தார்.
சிறிதும் நினைத்திராத இந்த ஆட்டத்தை, சிறிது சிறிதாக மகளின் அறிவுறுத்தல்கள் மற்றும் பயிற்சிகளின் படி பழகி, இன்று இந்த ஆட்டத்தில் உள்ள மிகவும் கடினமான பகுதிகளையும் செய்யக்கூடியவராக முன்னேறியுள்ளார்.
தற்பொழுது வட சீனாவின் ஜிலின் (Jilin) மாகாணத்தில் கம்பு நடனத்தில் மிகவும் சிறந்தவராக விளங்கும் இவர், கடந்த அக்டோபர் மாதத்தில் தேசிய அளவில் நடைபெற்ற போட்டியில் வயதானவர்கள் பிரிவில் வெற்றியாளராகத் தெரிவாகியுள்ளதுடன், தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு தனக்கு கொடுக்கப்பட்டிருந்த மிகவும் கடினமான பிரிவு ஆட்டங்களை மிகவும் சிறப்பாக செய்து பலரின் பாராட்டினைப் பெற்றுள்ளார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.