வல்வெட்டித்துறை அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட அமரர் வ.ஆ. அதிரூபசிங்கம் அவர்கள் மறைந்த செய்தியறிந்து நேரிலும், தொலைபேசியிலும், மின்னஞ்சல்கள், குறுஞ்செய்திகள் வழி ஆறுதல் கூறியவர்களுக்கும்,
கண்ணீர் அஞ்சலிகளை வெளியிட்ட வல்வை சார் புலம்பெயர் நலன் புரிச் சங்கங்கள், கலா மன்றங்கள், பொது அமைப்புக்கள், தொண்டைமானாறு செல்வச்சந்நிதி பிரதம குருமார்கள்,
அன்னார் தொடர்பான கட்டுரை மற்றும் கவிதைகள் வரைந்தோற்கும்,
அன்னாரது இறுதிக் கிரியைகள் வரை பல வழிகளில் உதவிகள் புரிந்த நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கும், இறுதிக் கிரியைகளில் கலந்து கொண்டவர்கள் அனைவருக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
அந்தியேட்டி கிரியைகள்
அன்னாரின் அந்தியேட்டி கிரியைகள் எதிர்வரும் 04-08-2017 வெள்ளிக்கிழமை அதிகாலை வல்வெட்டித்துறை ஊறணி தீர்த்தக் கடற்கரையில் அமைந்துள்ள அந்தியேட்டி மடத்தில் நடைபெறும்.
அந்தியேட்டிக் கிரியைகளிலும், அதனைத் தொடர்ந்து அன்று மதியம் அன்னாரின் இல்லத்தில் (அம்மன் கோவிலடி, வல்வெட்டித்துறை) நடைபெறும் வீட்டுக் கிருத்திய நிகழ்விலும் மதிய போசனத்திலும் கலந்து கொள்ளுமாறு உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
வெ.கார்த்திகேயன் (London)
Posted Date: August 04, 2017 at 20:19
அண்ணாவுடைய ஆத்மா சாந்தி அமையட்டும்
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.